Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சங்கப் புலவர் சன்மார்க்கம் என்னும் இப்புத்தகம், அருள் நெறித் தொடரின் மூன்றாவதாக வெளிவருகின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த புலவர்களை யெல்லாம் பொது வாகச் சங்ககாலப் புலவர்கள் என்று கருதுகின்றனர். அவர்கள் சங்ககாலத்துத் தமிழ்மக்களின் கொள்கைகளைப் பற்றியே பெரும்பாலும் பாடியிருக்கின்றனர். ஆதலால் அவர்களைச் சங்ககாலப் புலவர் மரபினராகக் கருதுவதிலே தவறில்லை.கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழகத்திலே வைதீக மார்க்கமும், பக்தி மார்க்கமும் பரவின. தேவார காலத்துக்குப் பின் தோன்றிய தமிழ்நூல்களால் இவ்வுண்மையை அறியலாம்.கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குமுன் தோன்றிய கவிதைகளிலும், நூல்களிலும் வைதீக மார்க்கத்தையோ, பக்தி மார்க்கத்தையோ மிகுதியாகக் காணமுடியாது. அக்கவிதைகளும், அந்நூல்களும் பெரும்பாலும் ஒழுக்க நெறியையே எடுத்து ஒதுகின்றன.சங்க நூல்களாகக் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே பல வகைப்பட்ட தெய்வங்கள் காணப்படுகின்றன; சொர்க்கம், நரகம் காணப்படு கின்றன; ஊழ்வினை காணப்படுகின்றது; தெய்வப் பிரார்த்தனை களும், வழிபாடுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவைகளைப்பற்றி விரிவாகக் கூறவில்லை.சங்ககாலப் பாடல்களிலும், நூல்களிலும், சங்ககாலப் பண்பைப் பின்பற்றிய பாடல்களிலும், நூல்களிலும் மக்கள் இவ்வுலகில் வாழவேண்டிய வழியைப் பற்றியே சொல்லப்படுகின்றன. அவைகள் உலக வாழ்வைப் பொய்யென்றோ, மாயம் என்றோ, நிலையற்றவை என்றோ வலியுறுத்தவில்லை.இல்லறத்தை நன்றாக நடத்துவது எப்படி? காதலனும் காதலியும் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும்?