Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பண்டை நாளில் மக்கள் வாழ்க்கையைக் களிப்புறச் செய்வதற்குக் கள் அவசியமாக இருந்தது. இக்காலத்தில் அது தேவையில்லை. கள்ளைக் காட்டிலும் களிப்புறச் செய்யும் பொருள்கள், நிகழ்ச்சிகள் செயல்கள் மலிந்து விட்டன.பாட்டு, நாடகம், படக்காட்சி, சிறுகதை, பேச்சு, பொதுஜன ஊழியம், சுதந்தரப் போராட்டம், விஞ்ஞான ஆராய்ச்சி, இலக்கியம் ஆகியவை, கள் கள்ளைக் காட்டினும் களிப்பூட்டுவன. இவற்றை இப்போது எல்லோரும் எளிதில் காணலாம்; நடத்தலாம்; அனுபவிக்கலாம். இவைகள் பண்டைக்காலத்தில் எல்லோர்க்கும் கிட்டாதவை. ஒரு சிலர்க்கே கிடைத்தன. ஆதலின் எளிதில் கிடைக்கும் கள்ளைக் கொண்டு களிப்புறலாம் என்று நம்பினர்; நடந்தனர்.பண்டைக்காலத்தில் தோன்றிய கவிதைகள் காவியங்கள், ஓவியங்கள், வீரத்தன்மை, வள்ளல் தன்மை எல்லாம் கள்ளின் மயக்கத்தால் பொங்கி வழிந்தவைகளே. நமது தமிழ் நாட்டுப் பெருநாவலர்களான, கபிலர், அவ்வையார் முதலியவர்கள் இந்தச் சுவையில் ஊறினவர்கள் தான். வள்ளல்களும் களிமயக்குடன் பொருளை வாரி வாரி இறைத்தவர்களே. அக்காலத்தில் உலக முழுதும் இந்த நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். இதில் ஐயமில்லை.காலப் பறவை தங்காது; சிறகை விரித்துக் கொண்டு பறந்துபோய்விடும். பறக்கும் சமயம் நெருங்கிவிட்டது. விரைவில் மதுவுண்டு மகிழ்ச்சிகொள்.மதுவருந்துதல் பாவம் அல்ல. அதுவும் ஆண்டவன் படைத்த பொருள்களில் ஒன்று. தீமையானவற்றை ஆண்டவன் படைக்க மாட்டான்.கொடி நிழல், ரொட்டித்துண்டு, சுவையுள்ள திராட்சை ரசம், இனிய பாடல், பெண்ணின் சங்கீதம் இவையே எனக்கு இன்பம் என்பன போன்ற கருத்துக்களை உள்ளத்திலிருந்து உதிர்த்திருக்கிறார் உமர் கய்யாம்.ஆதலால் வாழ்நாளை வீண்நாளாகக்காதே! இருக்கும் வரையிலும் மகிழ்ந்திரு.