Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
’அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்’ என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை.அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; குருபரர் என்பது சிற்றிலக்கியங்கள் பல இயற்றிய குமரகுருபர சுவாமிகளைக் குறிக்கும். இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புக்களை, அருணகிரிநாதர் என்ற தலைப்பிலும், குமரகுருபர சுவாமிகள் என்ற தலைப்பிலும் காணலாம்.இருவரும் சிறந்த புலவர்கள்; பக்தர்கள்; துறவிகள்; வடமொழிக் கலைகளையும், தமிழ்க் கலைகளையும் கற்றுணர்ந் தவர்கள்.இருவர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. குமரகுருபரர் பாடல்களிலே வடமொழியல்லாத வேற்று மொழிச் சொற்களும் உண்டு.தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்தால், தமிழ் கெட்டுப் போய்விடும்; அதன் தனித்தன்மை போய்விடும்; அதன் தூய்மை அழிந்துவிடும்; தமிழே அழிந்து போய் விடும்; என்று சொல்வோர் உண்டு.இவர்கள் கூற்று, மொழி வளர்ச்சியின் தத்துவத்தை அறியாதார்- அறிந்தும் அதை ஒப்புக்கொள்ளாதவர் கூற்று என்றே கொள்ள வேண்டும். பல மொழி மக்களுடன் கூடிப் பழகுவோரின் தாய்மொழியிலே பிற மொழிச் சொற்கள்- அவர்களுடன் பழகுவோர் மொழியில் உள்ள சொற்கள்- கலந்து தான் தீரும். இதற்கு உதாரணம் ஆங்கில மொழி ஒன்றே போதுமானது. ஆங்கிலத்திலே பல மொழிகள் கலந்ததால் அதன் இலக்கியம் அழிந்துவிடவில்லை; அதன் வளர்ச்சி குறைந்து விடவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி போய் விட்டாலும்,