Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி.பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள்.பண்டைத் தமிழ் மன்னர்கள் சர்வாதிகாரிகளாக விளங்கினாலும், நாட்டு மக்களின் நன்மைக்காகவே உழைத்து வந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக வாழ்ந்த மன்னர்களே மக்களின் மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர்.மன்னர்கள் சர்வாதிகாரம் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் அநீதி செய்யும்போது மக்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பிற நாட்டு அரசர்களின் துணை கொண்டாவது கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சியைத் தொலைக்கப் பின்வாங்க மாட்டார்கள்.பண்டைக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள், மன்னர்களுக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்தனர்; அவர்கள் அக்கிரமம் செய்யாமல் தடுத்து வந்தனர். அவர்கள் பொது மக்களின் நல்வாழ்வை முன்னிட்டு, அவ்வப்போது அரசியலில் தலையிடப் பின்வாங்கவில்லை.பண்டைத் தமிழரசர்களிலே தந்நலம் காரணமாக மக்களுக்குத் தீங்கிழைத்தவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டார்கள்; புலவர்களால் புகழப்படாமல் ஒதுக்கப்பட்டார்கள்; நல்லவர்களால் பழிக்கப்பட்டார்கள்.மக்களின் நலத்திற்காகவே வாழ்ந்த மன்னர்கள் தெய்வம் போல் போற்றப்பட்டார்கள்; அவர்கள் தெய்வங்களின் அவதாரமாகவே கருதப்பட்டார்கள்.பண்டை மன்னர்கள், புலவர்களையும், கலைஞர்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.