Librería Samer Atenea
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
புகழ்பெற்ற அரசியல் அறிஞனான சாணக்கியனும் தன் ’சதுரங்க’ ஆட்டத்திற்கு ’காய்கள்’ கிடைக்காது, தன் ஆற்றலின் தகுதியினை அளவிட வேறு பண்பாடுடைய பகுதியை நாடிச்செல்லும் அளவிற்கு அரசியல் அறிவு இயற்கையாய்ப் பெற்றிருந்த தமிழகம் - தென்னகம் - இன்று பேணப்படும் அரசியல் அமைப்பிற்கிணங்க அவல நிலையடைந்துள்ளது -அரசியற்துறையில்.இந்நிலை மாற, தமிழினம் தன் வருங்கால வாழ்வில் வீறு பெற, ஒரு அரசியல் மாறுபாடு, புரட்சிகரமான மாறுபாடு ஏற்படவேண்டும், ஒரு புதிய தமிழினத் தேசிய அரசியல் அமைந்தாக வேண்டும். உலகப் பெரியாராகிய வள்ளுவரை ஈன்ற தமிழினம், இன்னும் எத்தனை நாள் பெயரின்றி, ஊரின்றி; நாட்டுப் பெயர் சொல்லாமல், இனப்பெயர் தெரியாமல் வாழ்வது? இன்றையத் தென்னக வாழ்விலே ஊசலாடும் இக்கருத்தினை நிலைக்கள்ளனாகக் கொண்டு தேர்தல்களிலும் வாழ்விலும் மக்களை ஊக்கும் முறையில், இதனைத் தமிழர் உரிமையின் இவ்விடியற் போதில் உணர்ச்சியுடன், தக்க அறிவுலகப் பின்னனிகளின் ஊட்டுரைகளுடன் ஆக்கிய பன் மொழிப்புலவர் கா. அப்பாத்துரையாரின் பணி பெரிது- நூலின் அளவு சிறிதாயினும். தமிழினம் இந் நூலால் முழுத் தேசிய உணர்வு பெற் றுக் கீழ் திசை ஒளியாய் விளங்கி, எம்மை மேலும் இத்துறையில் பணிபுரிய ஊக்கமளிக்குமென நம்புகிறோம்.