Librería Samer Atenea
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தமிழ் நாடு அறிவுக்குப் பேர் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல படக் கிடக்கின் றன. தமிழ்நாடு அளித்த அறிவுக களஞ்சியங்கள் பல உண்டு. அறிஞர் தமிழ்நாட்டில் அன்றுந்தோனறினர்; இன்றுந் தோன்றுகின்றனர். அக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் நக்கீரர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் முதலியோர்; இக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் பூண்டி அரங்கநாத முதலியார், திருவிதாங்கூர் சுந்தரம் பிள்ளை. குடந்தை இராமாநுஜம். ஸர்.சி.வி. ராமன் முதலியோர். இந் நாளில் ஆராய்ச்சி உலகம் பெருகி வருகிறது. அவ்வுலகில் ஒளிர் வோருள் இந் நூலாசிரியர் கா. அப்பாத்துரை அவர்களும் ஒருவர். இவர் பன் மொழிப் புலவர். இவர் தம் நூல்கள் தமிழ் நாட்டைப் படிப்படியே ஓம்பி வருதல் கண்கூடு. இத்தகைய ஒருவரால் யாக்கப் பெற்றது இப்பாட்டு நூல். இந்நூற்கண் மில்ட்டனிசம் உயிர்ப்பாய நிலவுகிறது. அவ்வுயிர்ப்புக்கு ஏற்ற அரண்கள் எடுக்கப்பட்டுள்ளன. நூலுள் பல செம்பொருள்கள் மிளிர்கின்றன.அவற்றுள் ஒளியும்- இருளும் ஒளியும்- இருளும் உள்ளத்தைக் கவர்வன. ஒளியைப் பற்றியும், இருளைப் பற்றியும் உலகில் எழுந்த ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இருளில் ஒளி காண்டல் அறிவு. நள்ளிருளில் நட்டம் பயில்வானை என்பது மணிவாசகம். இருளில் ஒளி காண மக்களை இந்நூல் உந்தும் என்று நம்புகிறேன்.