Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு,புதுமை நிறைந்த நூற்றாண்டு,அறிவு பெருகிய நூற்றாண்டு,ஆற்றல் பெருகிய நூற்றாண்டு,மறுமலர்ச்சியும்,சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்;நாங்கள் 'பத்தாம் பசலிகள்' அல்லர்,புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பலர் பெருமைப்படுகிறார்கள்.ஆயினும்,நாம் வாழுகிற இந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இருபது என்கிற சொல் இருபதாம் நூற்றாண்டைக் குறிக்கும். ஏழு என்கின்ற சொல் ஏழாம் நூற்றாண்டைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் எவற்றையெல்லாம் நாம் புதுமைகள் என்று கருதுகிறோமே,அவற்றையெல்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த நாவுக்கரசர் பெருமான் நமக்கு நினைவுறுத்திச் சென்றார் என்ற செய்தியை விளக்குவதே இத் தலைப்பின் நோக்கம்.இங்கர்சால்,பிளேட்டோ,சாக்ரடீஸ்,போன்றவர்களை விடச் சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகுதியுடைய பெரியார் அப்பரடிகள் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை. ஒன்றைத் திருத்த வேண்டும் என்று சொன்னால்,அந்தக் கொள்கையில் நம்பிக்கையுடையவர்களே அதைத் திருத்த வேண்டும்;அவர்களால்தான் திருத்தவும் முடியும். அதில் நம்பிக்கையில்லாதவர்கள் திருத்தப்புகுவது வேடிக்கையாக,கேலிக்கூத்தாக,நகைப்புக்கிடமாகப் போய்விடும்.'கழனிகளிலே களைபிடுங்க இறங்குகிறவன் முதலில் களை எது?விளையும் பயிர் எது?என்று தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையானால்,பயிரையே களை என்று பிழையாகக் கருதிப் பிடுங்கிவிடுவான்.