Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
’மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு !அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும்.அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ’அமுதமொழிகளாக ’ வெளிவருகிறது இந்த நூல்.இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன் துளிகள்.எனது பக்தி, அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்தது. மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டாக்கி அவனைப் பூரணத்துவத்திற்கு - உயர்ந்த பரிபூரண வாழ்விற்கு அழைத்துச் செல்வதுதான் எனது சமயம்.எல்லாம் வல்ல இறைவன் நமக்கு இந்தப் பிறப்பைத் தந்தருளியது பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதற்காகத்தான். எனவே பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதுதான் பிறவியின் பயன் - சமயத்தின் சாரம்!இறைவன் சோறு போடமாட்டான்; நிச்சயமாகப் போடமாட்டான். அவன்தான் சோற்றை உண்டாக்கிக் கொள்ள நிலம், நீர், அறிவு, ஆற்றல், உழைக்கக் கைகள் அனைத்தும் கொடுத்திருக்கிறானே !மனிதகுலம் இன்ப அன்பிலே திளைத்து இன்புற்று வாழவே இந்த உலகம் - பேசும் மொழி - ஒழுகும் சமயம் யாவும் !அரசியல் என்பது சமுதாயத்திற்கு ஒரு வேலி போல. சமயம் என்பது மனிதனுக்கு உள்ளும் புறமுமாக இருந்து அவனை உணர்வால் - சிந்தனையால் தூண்டி வளர்த்துப் பக்குவப்படுத்துகின்ற ஓர் அரும்பெரும் சாதனம்.சுவையால் கனிக்குச் சிறப்பு ஏற்படுவது போல, மணத்தால் மலருக்குச் சிறப்பு ஏற்படுவது போல, நீரால் ஆற்றுக்குச் சிறப்பு ஏற்படுவது போல அவனுடைய ஆன்மாவின் தரத்தினாலும் - தகுதியினாலும் (கருத்தாலும் - உணர்வாலும்) மனிதனுக்குச் சிறப்பு ஏற்படும்!