Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன், தென் ஆப்பிரிக்காவிலே, முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடந்த காலத்திலும், நாட்டுத் தலைவராகி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின் போதும், சிறைச்சாலையிலேயும், நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும், அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்த போதும், வெறியன் வெடிகுண்டு வீசியபோதும், ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துக்களிலிருந்தும் அவர் தப்பினார். ஒவ்வோர் சமயமும் அவர் உயிருக்குப் பேராபத்து வந்துவிடுமோ என்று நாடு கலங்கிற்று.எதிர்பாராத ஆபத்து. எவரும் கனவும் கண்டிராத விதத்தில், ஏற்பட்டு அவர் உயிர் துறக்க நேரிட்டது. கயவனின் கைத்துப்பாக்கியினால்.இந்து மார்க்கத்தின் மாசு துடைத்து, அதற்குப் புதிய மாண்பு ஏற்படுத்துவதற்காகவும், அந்த மார்க்கத்தை சூதுக்கும் சுயநலத்துக்கும் ஆதிக்கத்துக்கும் சிலர் பயன்படுத்திக் கொள்ளும் கொடுமையை நீக்குவதற்காகவும் பாடுபட்டவர்களை, அந்த மதத்தைக் கெடுக்கிறவர்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, கேவல புத்தி படைத்தவர்கள், கருத்து வேற்றுமையைச் சாக்காகக் கொண்டு, காட்டு மிராண்டித் தனத்தைக் கையாண்டு, படுகொலைகள் பல செய்துள்ளனர். மதச் சீர்திருத்தவாதிகளின் வரலாறுகள் இத்தகைய சோகச் சம்பவங்களையே நிரம்பக் கொண்டவையாக இருக்கக் காணலாம்.இந்து மார்க்கத்துக்கு அவர் செய்ய எண்ணிய திருத்தங்களை, மத வெறி கொண்டோரும். ஆதிக்கக்காரர்களும் விரும்பவில்லை.