LIBROS DEL AUTOR: c n annadurai

24 resultados para LIBROS DEL AUTOR: c n annadurai

  • Makkal Karamum Mannar Siramum
    C. N. Annadurai
    மார்க்கத் துறையிலே, மன்னன் வற்புறுத்திய முறைகளை ஏற்க, ஸ்காட்லாந்து மக்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். ’என் ஆணைக்கா எதிர்ப்பு’ என்று மன்னன் ஆர்ப்பரித்தான். ’எமது கொள்கையை இழக்க மாட்டோம்’ என்று மக்கள் முழக்கமிட்டனர். மன்னன், ’போர்’ என்றான். மக்கள், ’தயார்’ என்றனர்! மன்னன்தான் தயாராக முடியவில்லை; பணமில்லை!!ஆண்டொன்றுக்கு 9,35,000 பவுன் தேவை என்றனர் படைத்தலைவர்கள். 30,000 வீரர்க...
    Disponible

    8,13 €

  • Idhayam Irumbaanal
    C. N. Annadurai
    ஊர்வலம் புறப்பட்டுவிட்டது! உலகம் அதுவரை கண்டறியாத அருமைமிகு ஊர்வலம்! இதைவிடத் திரளான மக்கள் கொண்ட ஊர்வலம் நடைபெற்றதுண்டு. கோலாகலம் அதிகம் இருந்ததுண்டு! மகிழ்ச்சி கொந்தளித்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. முடிதரித்த மன்னனை, 'ஆண்டவனின் பிரதிநிதி' என்ற முறையில், பயபக்தியுடன் வரவேற்று, வழிபட, மக்கள் இருமருங்கும் கூடிநிற்க, அருளாளன் அளித்த அதிகாரம் நமக்கு அரணாக இருக்கிறது என்ற எண்ணம்,...
    Disponible

    8,13 €

  • Jebamalai
    C. N. Annadurai
    'எங்கே என் ஜெபமாலை? ஐயோ! ஜெபமாலையின்றி நான் ஒரு கணமும் உயிர் தரியேனே. என் உயிருக்கு உயிர், ஜெபமாலையல்லவா? என் வாழ்வுக்கு வழிகாட்டி, இருதயத்துக்கு இன்பம், துயர் நீக்கும் துணை, கதியளிக்கும் காவல், ஜெபமாலையாயிற்றே, ஜெபமாலையின்றி நான் எப்படி இருக்கமுடியும்?என் எதிரே,முத்து, ரத்னம்,தங்கம்,பட்டு, எல்லாம் இருந்தும் என் மனம், ஜெபமாலையையே நாடுகிறது. ஜெபமாலை என்னை ஆட்கொண்டபிறகு, வேறு எதற...
    Disponible

    8,04 €

  • Komalathin Kobam
    C. N. Annadurai
    'விடுதலை! வந்துவிட்டது தங்கத்திற்கு! லிங்கத்தின் பாடு கொண்டாட்டந்தாண்டா. இனி மேலே அவன் அவன்தான்; நாம்ப நாம்பதான்.''நம்மை எல்லாம் மறந்து விட்டாலும், நாராயணனை மாத்திரம் மறக்கமாட்டான். அவங்க இரண்டு பேரும், வந்த நாளா ஜோடி போட்டுக்கிட்டாங்க. என்னமோ சூது இருக்கு.''நாராயணன் மந்திரக்காரனாச்சே! ஏதாகிலும் மந்திரம் கிந்திரம் கற்றுக் கொடுத்திருப்பான்.''மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம...
    Disponible

    7,39 €

  • Thanjai Veezhchi
    C. N. Annadurai
    சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு - வஞ்சகர்களோ எப்படியோ, எதைச் செய்தோ, வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை, தமிழக வரலாற்றுச் சுவடியிலே காணலாம் - தெளிவாகவும் விளக்கமாகவும் இராது - ஓரிரு வரிகள் - சிறுசிறு சம்பவங்கள் முறையிலே!!முடிதரித்த மன்...
    Disponible

    8,13 €

  • Pidi Sambal
    C. N. Annadurai
    'சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்! பாய்ந்து சென்ற திக்கெலாம் வெற்றி கண்ட வேந்தன், பராக்கிரம மிக்க பார்த்திபன், சாளுக்கிய திலகம் புலிகேசியும் போரில் தோற்றான்; அவனுடைய குருதி சாளுக்கிய மண்ணிலே குழைந்து கிடக்கிறது. வீர உரையாற்றி, வெற்றி முழக்கமிட்டு, பிடிபட்ட மன்னர்களை விரட...
    Disponible

    7,29 €

  • Pavazha Paspam
    C. N. Annadurai
    'சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப் போக்க, நான் தந்திரமாக என் மதியை உபயோதித்ததால் வந்தது. அவ...
    Disponible

    9,15 €

  • Gumasthavin Penn
    C. N. Annadurai
    'ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல. நான் தேவிதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனை, சாகடித்தேன். நாடகத்திலே பரிதாபத்திற்குரி...
    Disponible

    7,44 €

  • Kumarikottam
    C. N. Annadurai
    'ஸ்ரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள். மகா உத்தமர். அவருடைய திவ்ய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவர், ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது! பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை என்று கூறலாம்.உலகமே தலைக்கீழாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்...
    Disponible

    7,26 €

  • Makkal Theerpu
    C. N. Annadurai
    'பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! -அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது -அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே சிதறியே போய்விடும். நீ, ஏதோ புத்தகங்களிலே படித்துவிட்டுப் பேசுகிறாய், பொதுஜன வாக்கு...
    Disponible

    7,07 €

  • Udan Piranthar Iruvar
    C. N. Annadurai
    'காட்டு மிருகங்களுக்குக் குகையும் புதரும் உண்டு, தங்கியிருக்க; நாட்டைக் காக்கும் போர் வீரர்களாகிய உங்களுக்கு உறைவிடம் உண்டா?'இல்லையே!!'மாற்றான் வருகிறான் தாயகத்தைத் தாக்க, உங்கள் இல்லத்தைக் காக்கக் கிளம்புங்கள் என்று தளபதிகள் முழக்கமிடுகிறார்கள், உங்களைப் போர்க்கோலம் கொள்ளச் செய்கிறார்கள்! உங்களுக்கு எங்கே இல்லம் இருக்கிறது? எந்த இல்லத்தைக் காப்பாற்ற நீங்கள் போரிடவேண்டும்?...
    Disponible

    8,13 €

  • Ettu Naatkal
    C. N. Annadurai
    ’எட்டு நாட்கள்! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகியிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை - வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது - இன்று 1600-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள் - எட்டு நாட்கள் உள்ளன, தண்டனை நிறைவேற்றப்பட! அவன் விரும்பினால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். 'ஐயனே! அடிபணிகிறேன், அஞ்ஞானத்தால் நான் உளறிவந்தேன...
    Disponible

    7,13 €

  • Raththam Pongiya Irupathu Aandugal
    C. N. Annadurai
    இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று - காலடிப் பட்ட இடமெல்லாம்! களம் பலப்பல! கடுவேகமாகப் போரிட்ட வண்ணம், நாடு பல வென்றான்; நானிலம் நடுங்கிடப் போரிட்டான். எங்கும் இரத்தவெள்ளம்; பிணமலை; எலும்புக் குவியல்!! போர்! போர்! போர்! என்று முழக்கம் எழுப்பியபடி, இருபது ஆண்டுகள், எங்கும் எவரும் இவன் நடாத்தும் செயல்கள் பற்றியே பேசித் தீரவேண்டிய நிலைமை ஏற்படுத்திவிட்டான்; இரத்தம் பொங்கிற்...
    Disponible

    9,65 €

  • Aariya Maayai
    C. N. Annadurai
    ஆரிய மாயை (Arya Mayai) என்ற நூல் கா. ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய ஒரு சிறு நூலாகும். மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்கள் கடுமையாகச் சாடப்பட்டுள்ளதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்தக் காரணங்களுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற ...
    Disponible

    8,65 €

  • Samadharmam
    C. N. Annadurai
    சமதர்மம்--ருசிகரமான வார்த்தை--நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டுவரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மக்களுக்குள் எந்தக் காரணங் கொண்டும் பேத உணர்ச்சியோ, அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது. வாழவேண்டும்; பிறர் வாழ்வைக் கெடுக்காமல் என்ற சிறந்த நோக்கங் கொண்டவர்கள் மட்டுமல்ல, நாட்டிலேயுள்ள காட்டு ராஜாக்கள் கூடப...
    Disponible

    9,60 €

  • Viduthalaipor
    C. N. Annadurai
    இரு நூறாண்டுகளுக்கு மேல் இந்திய உபகண்டத்தை ஆட்டிப் படைத்த வெள்ளை அரசியலதிகாரம் விலகுகிறது. வெள்ளையன் வெளியேறுகிறான். விடுதலைகிடைத்துள்ளது. யாவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய செய்தி.விடுதலைப் போர் வெற்றியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிடைத்துள்ள விடுதலையைக் கூர்ந்து கவனிப்போருக்கு வேறுபல உண்மைகளும் புலப்படும். அன்னியனாட்சியில் ஒடுங்கிக் கிடந்த ஒரு இந்தியா, விடுதலையடைந்தவுடன் இரு ப...
    Disponible

    8,01 €

  • Kadaisi Kalavu
    C. N. Annadurai
    'உன் பெயர் என்னப்பா?''அவசியம் தெரியவேண்டுமா?''இதிலென்ன கோபம்? பெயர் என்ன என்றுதானே கேட்கிறேன்! வேறென்ன கேட்டுவிட்டேன்!''எதை வேண்டுமானாலும் கேளேன்; எனக்கென்ன? என் பெயர், ஏகாம்பரம்''நிஜமாகவா? ஏகாம்பரம் என்பதா உன் பெயர்!''ஏன், பிடிக்கவில்லையா, அந்தப் பெயர்? சரி, சதாசிவம்! இந்தப் பெயர் பிடிக்கிறதா?''அழகாகத்தான் இருக்கிறது, சதாசிவம் என்பது. ஏகாம்பரம் என்ற பெயரும் நல்ல பெயர்தான். நா...
    Disponible

    9,40 €

  • Vallinayagiyin Kobam
    C. N. Annadurai
    கடவுள் இருக்கிறார்!கடவுளுக்குத் தெரியும்!கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!கடவுளுக்குப் பொதுவாக நட!கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!கடவுள் கைவிடமாட்டார்!கடவுளின்மீது பாரத்தைப் போடு!***கடவுளைக் கண்டவர் இவர்-பெரிய ஞானி-மூடுடா வாயை!கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?கடவுளா கொடுத்தார் -கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா-காரியம் ந...
    Disponible

    9,65 €

  • Karpanai Chithiram
    C. N. Annadurai
    'ஏதோ எனக்கொன்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும், அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை நிம்மதியாக வாழ எனக்கு வசதியிருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும், என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டு வைக்கவில்லை. வாழ் வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை'என்று கூறினார், ஓய்வூர் மிட்டாதாரர் ஓயிலானந்த பூபதி. கொஞ்சம் கோபத்துடன், அவரிடம் பேசிக் கொண்டிருந்...
    Disponible

    8,16 €

  • May Dhinam
    C. N. Annadurai
    வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூர உற்சவம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் சனிக்கிழமை உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, கார்த்த்திகையில் தீபவிழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி. இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலைமுறை தலைமுறையாகப் பழக்கப்பட்ட மக்களிடையே மே தின விழாக் கொண்டாட முற்பட்டி...
    Disponible

    9,07 €

  • Thazhumbugal
    C. N. Annadurai
    அவன் ஓர் ஏழை! எண்ணற்ற ஏழைகளுக்கிடையில் அவன் ஒருவன்! ஆனால், ஏழைகளில் பலருக்கு ஏற்படாத எண்ணம் அவன் மனத்திலே கொந்தளித்தபடி இருந்து வந்தது.அவன் ஓர் ஏழை! ஆனால் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம், எப்படித் தனது ஏழ்மையைப் போக்கிக் கொள்வது என்பது அல்ல; எப்படி நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவது என்பது அல்ல; அதைப்பற்றி எண்ணிப் பார்த்திட அவனுக்கு நேரமே இல்லை. எந்த நேரமும் அவ...
    Disponible

    8,13 €

  • Vandikkaran Magan
    C. N. Annadurai
    ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம்.அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள்.விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக் கேட்க அருணகிரி வருவான் வருவான் என்று எத்தனை நாட்களாகக் காத்துக் கிடப்பது. ...
    Disponible

    7,23 €

  • Thirumalai Kanda Dhivya Jothi
    C. N. Annadurai
    [மதுரை மன்னன் திருமலையின் மாய மரணம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு சித்தரிக்கப்படும் ஓவியம் இது. இட்டுக் கட்டியதோ என்று ஐயப்படுவோருக்கு, எம். எஸ். சுப்ரமணிய ஐயர் தீட்டிய கன்னியர் வீரம் என்ற சிறு நூலில், பட்டர் புதல்வி என்னும் சிறு கதையைப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்][சுந்திரவல்லி]மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரதம பட்டாச்சாரியின் திருமகள் நான். பெயர் சுந்திரவல்லி. இளமங்கை-எழி...
    Disponible

    7,24 €

  • Singala Seematti
    C. N. Annadurai
    'நாகரிக நாட்கள் என நீ கூறுகிறாய் பெண்ணே! இன்றுங்கூட நடையிலே, உடையிலே, நாகரிகத்தைக் காண்கிறோமே தவிர, எண்ணத்திலே பழைய விஷயம் இருந்தபடிதான் இருக்கிறது. உன்னை வலைபோட்டுப் பிடிக்க விரும்பும் அந்தச் சொகுசுக்கார சங்கரன் கூட நாகரிக நாயகனாக நடிக்கிறானே தவிர, உள்ளம் பழைய எண்ணம் நிரம்பித்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்' என்று மங்கம்மாள் கூறினாள்.மலர்க்கொடி நகைத்தாள்! அவள் சிரி...
    Disponible

    7,24 €