Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம்.தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல் வடமொழிக்குரியது என்று கூறுவார் மயக்கக் கூற்றைத் தக்க சான்றுகள் கொண்டு மறுத்து அது தமிழ்ச் சொல்லேயாமென்றும், தமிழில் மந்திரங்கள் உளவென்றும் விளக்கப்பெற்றிருக்கின்றன. இது சாத்திர ஆராய்ச்சியாளர்க்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கும் பெரிதும் பயன்படும். இதனை எழுதித் தமிழுலகிற்குப் பயன்படுத்திய ஆசிரியருக்கு நிரம்பவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.சைவம் சித்தாந்தம் என்ற இரு சொற்களின் பொருளை முதற்கண் ஆராய்ந்து கொண்டு பின் அவ் விரண்டிலுமாகிய தொடர்மொழிப் பொருளின் வரலாற்றை ஆராய்வாம். சைவம் என்றது சிவம் என்னுஞ் செந்தமிழ்ச் சொல்லடியாய்ப் பிறந்து சிவனோடு தொடர்புடைமை என்னும் பொருளில் வழங்குவது, சிவனைப் பற்றிய நிலையையும் சைவ நூல்களையும் சிவனடி சேர்தற்குரிய நெறியையும் அச்சொல் குறிக்கும். சித்தாந்தம் என்பது சித்த அந்தம் என்ற இரு சொற்களால் ஆகி முடிபின் முடிபு என்று பொருள் பெறும். சைவ நூல்களின் முடிந்த முடியைக் கூறும் நூல்களைச் சைவ சித்தாந்த மென்ப அச்சை சித்தாந்த நூல்கள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எளிதில் எய்துதற்குரிய நெறி ஈதெனக் காட்டுவன.