Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
1975 முதல் 1979 செப்டம்பர் வரை சில ஆண்டுகள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரமான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக புத்தக வடிவில் வெளி வருகிறது.பாசாங்குகளும், போலித்தன்மைகளும் நிறைந்த மனிதர்கள் சமூக வாழ்வில் தென்படுகிற வரை அப்படி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும் - அவை நிஜத்துக்கு அப்பாற் பட்ட - நிஜத்தை விட அதிகமான பொய்ம் முகங்களாகவும் இருக்கும்.அந்தப் பொய்ம் முகங்களைத் தேடி அடையாளம் காணவும் காட்டவும் முயல்வது ’அதிகப் பிரசங்கித்தன’ என்று பழமைவாதிகள் நினைக்கலாம் - சொல்லலாம், அபிப்ராயப்படலாம்.ஆனால் அப்படிப் பொய்ம் முகங்களை தேடி விலக்கி - மெய்யான தோற்றத்தைச் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் காட்டும் அதிகப் பிரசங்கித்தனங்கள் இன்றைய இலக்கியத்துக்கும் நாளைய இலக்கியத்துக்கும் என்றைய இலக்கியத்துக்கும் அவசியம் தேவைப்படுகிறது.