Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
எனக்கு அறுபதாண்டு பூர்த்தியானவுடன் நான் நாடக மேடையின் மீது தோன்றுவதையே வர வரக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்த சமாசாரம், எனது நண்பர்களில் பலர் அறிவார்கள். அப்படியிருக்கும் பொழுது, கொஞ்சகாலம் சென்று, நாடகமேடையில் நடிப்பதை விட அதிக கஷ்டத்தைத் தரத்தக்க பேசும் படக்காட்சியில் நான் தோன்றிய சமயம், என்னை அறிந்தவர்களில் பலர், ’ஏது? இந்த வயதில் இவர் எப்படி இக்கஷ்டமான காரியத்தை மேற்கொண்டார்?’ என்று கேட்டிருக்கின்றனர். ஆகவே, நான் பேசும் படக்காட்சியில் நடிக்கும்படி நேர்ந்த விதத்தை யறிய எனது நண்பர்கள் விரும்புவார்களெனக் கருதி இதை எழுதலானேன்.சில வருடங்களுக்கு முன் மௌனப் படக்காட்சிகள் தோன்றியபோது, அவைகளை நான் பார்த்து சந்தோஷப் பட்ட போதிலும், அவைகளில் நான் நடிக்க வேண்டு மென்னும் எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் குரலைக்கொண்டு ஜனங்களை மகிழச் செய்யாது, கேவலம் பாவங்களினால் மாத்திரம் அவர்கள் மனதைத் திர்ப்தி செய்வதென்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதே. இரண்டொருவர் அம் மௌனப் படங்களில் தோன்றும்படியாக என்னைக் கேட்டும் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு தமிழில் பேசும் படக்காட்சிகள் ஆரம்பமானதும், அந்தரங்கத்தில் எனக்குப் பேசும் படத்தில் ஒரு முறையாவது நடிக்க வேண்டுமென்னும் ஆர்வம் பிறந்தது. ஆயினும், 'நமக்கோ வயதாகிவிட்டது. பேசும் படக்காட்சியில் நடிக்க விரும்புவோர் நல்ல யௌவன முடையவர்களாக இருக்க வேண்டும்; அன்றியும் தேகபலம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும். ஆகவே, இந்த ஜென்மத்தில் நமக்கு இது பிராப்தமில்லைபோலும்; ’கிட்டாதாயின் வெட்டென மற’ என்று ஒளவையார் கூறியபடி, இவ்வாசையை அடக்கி விடவேண்டும்' என்று எண்ணி அப்படியே செய்தேன்.