Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்த நாவலுக்கு ஏனோ தெரியவில்லை ஆசிரியர் பசி என்று பெயர் வைத்து விட் டார். வேறு எந்தப் பெயர் வைத்திருந்தாலும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. பசிதான் உலகத்தின் நியதி என்பதே ஆசிரியரின் கட்சி.மனிதனின் பசிகளைத் தீரித்து விடுவதென்பது வெறும் லக்ஷ்யவாதிகளின் கனவே தவிர வேறு அல்ல. சாமாவின் பசிகள் அலாதியானவை; சற்று விசித்திரமானவை என்று கூடச் சொல்லலாம்.கமலாவின் தாற்காலிகப் பசி எளிதில் சமனமாகக் கூடிய து: மிகவும் நியாயமானது. அதைத் தீர்ப்பது தன் கடமை என்று சாமா கடைசியில்தான் உணருகிறான். சொந்த விஷயங்களைப் பற்றி யாராலும் நேர்மையாக, தெளிவாக, சுலபமாகச் சிந்தனை செய்ய முடிவதில்லை. தன் மனத்தை அறிய சாமா வெகுவாகப் பாடுபடுகிறான். சுந்தரப்பாட்டி, நாராயணையர், ஜானம்மாள் முதலியோர் வேறு ஒருவருக்காக வாழ்க்கையில் பசி கொண்டுள்ளவர்கள். படித்துப் பட்டம் பெற்ற ராஜி தன் உள்ளத்துப் பசிகளை மூடி வைக்க முயலுகிறாள். சாம்ப மூர்த்திராயர் பசிகளை எல்லாம் மீறியவர்தான். ஆயினும் அவரும் மனிதர்தான்.