மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - திரு. வி. கலியாணசுந்தரனார்அவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர். அவரை மகாத்மா காந்தி என்று உலகம் போற்றுகிறது; காந்தியடிகள் என்று தமிழுலகம் போற்றுகிறது.மகாத்மா என்பது ஆழ்ந்த பொருளுடையது. அது வெறும் மகான் என்னும் பொருளில் மட்டும் அடங்கிக் கிடப்பதன்று. மகானிலும் மகாத்மா பொருண்மை வாய்ந்தது.