Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு விழா, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில், பண்டித மணி - கதிரேசஞ் செட்டியார் தலைமையில் 1930 -ஆம் வருடம் டிசம்பர் மாதம்25, 26, 27ஆம் நாட்களில் நடைபெற்றது. மூன்றாம் நாள் கூட்டத்தில்'இமயமலை' என்னும் பொருள் பற்றிப் பேசும் பேறு எனக்குக் கிடைத்தது.அப்பொருள் பற்றிப்பேசித்தொகுப்புரை கூறி யான் அமர்ந்ததும், மேடை மீதிருந்த பலர், அப்பேச்சைப் பத்திரிகை யில்எழுதி வருமாறும், பின்னே அதை நூலாக வெளியிடுமாறும் விண்ணப்பித்தனர். அவருள்சமாஜ அமைச்சர்- திருவாளர்- மயிலை - பால சுப்பிரமணியனாரும், திருவாளர்- கிழக்கு மருதூர்- நாராயண சாமியாரும்பெரிதும் வலியுறுத்தி உறுதிமொழியும் பெற்றுக்கொண்டனர். அன்பர்கள்விருப்பத்துக்கிணங்கி, எனது பேச்சை 'நவசக்தி’யில்வாரந்தோறும்எழுதி முற்றுவித்தேன். அப்பேச்செழுத்துப்பொருளைக்கொண்டதே இந்நூல். நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்கு 'இமயமலை அல்லது தியானம்' என்னும்முடி சூட்டப்பட்டது.