Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கடவுள் இருக்கிறார்!கடவுளுக்குத் தெரியும்!கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!கடவுளுக்குப் பொதுவாக நட!கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!கடவுள் கைவிடமாட்டார்!கடவுளின்மீது பாரத்தைப் போடு!***கடவுளைக் கண்டவர் இவர்-பெரிய ஞானி-மூடுடா வாயை!கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?கடவுளா கொடுத்தார் -கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா-காரியம் நடந்துவிடும்-மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்!கடவுள் காப்பாற்றுவார் போடா-ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்-போ, போ-கடவுளைக் கேளுதாச்சொல்லி-தருவார்-போ.கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை-கண்ணைக் குருடாக்கிவிட்டாரா-கைகாலை ஒடித்துவிட்டாரா-கொழுத்துத்தான் கிடக்கிறான்.கடவுள் கொடுத்தார்னுதான் ’ஜம்பம்’ பேசுகிறான், அந்தக் கள்ளன்.கடவுள், அவன் பக்கமா இருப்பது-அடுக்குமா?கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?***கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?கடவுள் இருந்தால், இப்படியா செய்வார்?கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்-காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்-கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.***