Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இவ்வரிய பெரிய உபந்யாசம் வேதாந்த சித்தாந்த அதிஅவசிய நுட்பப்பொருளை யாவரும் இனிதறியும்படி எளிதாக விளக்குதலால், இது தென்னாட்டில் தத்துவ விசாரணை செய்வார் எல்லார்க்கும் மிகவும் பயன்படுமாகலின், இதனை அவசியம் புத்தக உருவாகப் பிரகடனஞ் செய்தல் வேண்டுமென, இச்சபையின் காரிய நிருவாகசபை அங்கத்தினர்களான ஸ்ரீமான். அ. மதுரைநாயகம் பிள்ளை யவர்களும், ஸ்ரீமான். த. மகாதேவ பிள்ளை யவர்களும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதனால் இஃது அவ்வாறே வெளியிடப் படுகின்றது.சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு, ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்களுமாம். அதிபரிபக்குவ முடையார்க்கு இன்றியமையாது வேண்டப்படும் முடிபொருளை யுணர்த்தும் வேதத்தின் ஞானகாண்டப் பகுதியே வேதாந்த மெனவும், அதிதீவிரபரிபக்குவமுடையார்க்கு அங்ஙனமே முதன்மையாகப் பெறக் கிடந்த சிவப் பேற்றை உணர்த்தும் சிவாகமப் பகுதியே சித்தாந்தம் எனவும் அறிவுடையோரால் வழங்கப்பட்டு வருகின்றன.இனி இவ்வேதாந்த சித்தாந்தம் இரண்டும் சுத்த அனுபவ சாஸ்திரங்களாகும். வெறும் வாசாகயிங்கரியமாக விவரிக்கப்படுகின்ற தர்க்கம் மீமாம்ஸம் முதலிய சாஸ்திரங்களைப் போலாது, சுத்த ஞான மயமாய்ச் சுத்த ஆனந்த மயமாய்ச் சுத்த அருள் மயமாய் அருவாய் விளங்கும் பரப்பிரமமான சிவத்தை வாக்கு மனங் கடந்து நின்றனுபவிக்கும் முடிந்த நிலையை அறிவிக்கும் ஞானசாஸ்திரங்களான இவை விசேஷ அறிவோ டிருந்து விசாரிக்கற் பாலனவாம்.