Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
உமாபதிசிவாசாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் என்னும் இந்நூல், திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயன்றது; பத்து அதிகாரங்களையுடைது. ஒவ்வோரதிகாரமும் பத்துக் குறள்களை யுடையன. இதன்கண் நூறு குறட்பாக்கள் உள்ளன.ஆசிரியர் திருவள்ளுவனார், அறமுதலாகிய மும்முதற் பொருள் எனத் தொல்காப்பியர் குறித்தவண்ணம் தம்நூலை மூன்றன்பகுதியாக (முப்பாலாக) இயற்றியுள்ளார். தொல் காப்பியனார்க்கும் திருவள்ளுவர்க்கும் பின்வந்த பெருமக்கள் உறுதிப்பொருள்களுள் மூன்றாவதாகிய இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டாகப் பகுத்து, முன்னதனை இன்பம் என்றும், பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு உறுதிப்பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகக் கொண்டனர்.திருவருட்பயன் என்னும் இந்நூல், திருக்குறளை அடியொற்றி அதன்கண் குறிப்பாகக் கூறப்பெற்றுள்ள மெய்ந்நூற் பொருளின் விளக்கமாக அருளிச் செய்யப் பெற்ற சைவசித்தாந்த நூலென்பது, இதன்கண் உள்ள குறள் வெண்பாக்களின் சொற் பொருளமைப்பாலும், பத்துக் குறள் கொண்டது ஓர் அதிகாரமாக அமைந்த அதிகாரத் தொடர்பாலும், முதல் அதிகாரமாகக் கடவுள் வாழ்த்தை வைத்து அகர முதல எனத் திருவள்ளுவர் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும் பதிமுது நிலையை இந்நூலின் முதலதிகாரமாக வைத்து.அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும்நிகரிலிறை நிற்கும் நிறைந்து(திருவருட்பயன்-1)என இந்நூலைத் தொடங்கியிருத்தலாலும் நன்கு துணியப்படும்.