Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது.வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச் சிறப்பு.இதனைப் படிக்கும் மக்கள் அனைவருக்கும் இலக்கிய ரஸனை மாத்திரம் அல்ல, தமிழ் ஆராய்ச்சி மாத்திரம் அல்ல, வள்ளுவன் கூறினானே,'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்'என்ற அந்த ஒழுக்கத்தையும் தரும்படியாக கட் டுரைகள் அமைந்துள்ளன. ஆதலின் செந்தமிழ் நாட்டு மக்கள் யாவரும் இந்நூலைப் படித்து, ரஸித்து பயனுற விரும்புகிறோம்.வெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ’முட்டைக் கண்ணா’ என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை.