Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம்.பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.உலகிலுள்ள மார்க்கங்கள் பலவாகத் தோன்றும். அவை களின் உள் நுழைந்து ஊன்றி நோக்கின், அவைகள் யாவும் ஒன்றாகவே விளங்கும். அவ்வொன்று சன்மார்க்கம் என்பது.மக்கள் வாழ்வில் பெறத்தக்க பேறுகள் பல என்பது பொது மொழி. ஒவ்வொன்றையும் தனித் தனியே பெறுவது அரிது. அப்பேறுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாயுள்ள ஒன்றைப் பெறுவது அவை எல்லாவற்றையும் பெறுவதாகும். அவ்வொரு பெரும் பேறு எது? அது சமரசப் பேறு. சமரசப் பேற்றில் எல்லாம் அடங்கும்.இப்பெற்றி வாய்ந்த சமரசத்தைக் கூட்ட வல்லது எது? தனித்தனி நாடு - மொழி - நிறம் - வகுப்பு - மதம் முதலியன, உண்மைச் சமரசத்தை வழங்கவல்லன வாகுமா என்பது கேள்வி. இவைகள் பிரிவு உணர்வுகளை எழுப்பிக் கொண்டிருத்தல் வெள்ளிடைமலை. இவைகளினூடே ஒருமையாய்ப் பரந்து நின்று, மேலுங் கடந்து நிற்கும் சன்மார்க்கம் ஒன்றே, உண்மைச் சமரசத்தை வழங்கவல்லது என்னும் நுட்பம் அநுபவத்தில் விளங்குவது. இதனால் சன்மார்க்கம், சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுவதாயிற்று.சன்மார்க்கத்தில் நின்று, நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலியவற்றை நோக்குவோர்க்குப் பிரிவு உணர்வு தோன்றுதல் அரிது. அவர்க்குச் சமரச உணர்வே தோன்றும். அவ்வுணர்வும் செயலும் பெற்றவர். எல்லாம் பெற்றவராவர்.