Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஆரியவர்த்தத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலை நாடு. அதற்கு இராசதானி அயோத்தி. அங்கே தசரதன் என்னும் வேந்தர்வேந்தன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ் சினன், மன்னுயிரைத் தன்னுயிர் போல நேசிப்பவன், கொடையிற் கற்பகத்தை வென்றவன், பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு.இவனுக்கு மனைவியர் மூவர் : கௌசலை, கைகேயி, சுமித்திரை. இம்மூவரும் வெவ்வேறு நாட்டு இராசகன்னிகைக ளாயினும் ஒருதாய் மக்கள் போல ஒருவர் பாலொருவர் அன்பு பாராட்டின துமன்றி மூவரும் தசரதனைக் கண்ணுங் கவசமும் போலப் பேணிவந்தனர். இவர்களுள் பட்டத்தரசி கௌசலைக்குச் சாந்தை என்னும் மகள் பிறந்தாள். தமக்குப் பிள்ளை யில்லாத உலோமபாதமுனிவர் சாந்தையைத் தமக்குப் பிள்ளையாய்த் தரும்படி தசரதனை வேண்ட, அவன் அவளை அவருக்குத் தத்தஞ் செய்துவிட்டான். உலோமபாதமுனிவர் தக்க காலத்திலே சாந்தையைக் கலைக்கோட்டு மகாமுனிவருக்கு விவாகஞ்செய்து கொடுத்தார்.இது நிற்க, தசரதனுக்கு மூவர் மனைவியரிடத்தும் நால்வர் மைந்தர் தோன்றினர்: கௌசலை இராமனை ஈன்றாள், கைகேயி பாதனைப் பெற்றாள், சுமித்திரை இலக்குமணன் சத்துருக்கினன் என்னும் இரட்டைப்பிள்ளைகளைப் பயந்தாள். மக்கள் நால்வரும் நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாக, சுக்கிலபட்சத்துச் சோதியம்புலிபோல வளர்ந்துவந்தனர். பிள்ளைகள் மழலை மொழியாலும் பலவகை விளையாட்டினாலும் பெற்றாரைக் களிப்பித்தனர்.