Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
1975-ஆம் ஆண்டு வாக்கில் நான் எழுத்தாளரானேன். சுமார் 50 சிறுகதைகள், ’தாமரை’, ’கலைமகள்’ உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் வெளியான சமயத்தில், 1976ஆம் ஆண்டில் நான் எழுதிய முதலாவது நாவலான ’பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்... - ஒரு கோட்டுக்கு வெளியே’ வெளியானது. கால் நூற்றாண்டிற்குப் பிறகு, இப்போது இந்த நாவலை மறுவாசிப்பு செய்தபோது, அப்போதைய பல்வேறு சமூக - இலக்கிய சங்கதிகள் நினைவுகளை மலர வைக்கின்றன. எழுத்தால், இந்த சமுதாயத்தை புரட்டிப் போடலாம் என்று எழுதத் துவங்கிய நான், இப்போது இந்த தனித்துவ குணத்தை இழந்து, இலக்கியத்தில் தடம் பதித்த எனது முன்னோர்களையும் பின்னோர்களையும், அவர்களின் சமூகச் சேர்மானத்தோடு நினைத்து, என்னை, ஒப்பிட்டுக் கொள்கிறேன். எனது இலக்கியப் பங்கு கணிசமானது. சமூக அளவில் கண்ணுக்கு தெரியாத மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும், ஒர் மார்க்ஸிம் கார்கியின் ’தாயை’ப் போல சமூகத்தில் தடம் பதிக்கவில்லை. இதற்கு நான் மட்டுமல்ல, இந்த சமூக அமைப்பும் காரணம்.இந்த நாவல், எனது நாவல்களிலேயே இன்றளவும் அதிகமாகப் பேசப்படுகிறது. இதற்கு இணையாக எனது ’வாடாமல்லி’ இப்போது பேசப்பட்டாலும், இந்தப் படைப்பு, இந்த நாவலின் வயதளவிற்கு வரும்போது பேசப்படுமா என்பது புதிர்தான். ’ஒரு கோர்ட்டுக்கு வெளியே’யின் சிறப்பு, எந்தப் பத்திரிகையிலும் தொடர்கதையாக வெளிவராமல், நேரடியாக எழுதப்பட்டது என்பதுதான். என்ன காரணத்தினாலோ, பதிப்பாளர்கள், இந்த நாவலை நூலகங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும், இந்த நாவலைப் போன்ற தாக்கத்தை, எந்த நாவலும் இந்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.