Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள் மீது ஒரு மந்திரம் போட்டிருந்தான். அதனால் மலர்விழி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை.பத்திரகிரி ராஜன் மனம் வருந்தி ஒரு தேவதையிடம் சென்று 'தாயே! இளவரசி மலர்விழி மனம் மாறி என்னை மனப்பதற்கு என்ன செய்யலாம்?' என்று கேட்டான்.'இளவரசி மலர் விழியின் அரண்மனை அந்தப்புரத்தில் ஒரு பெரிய பூனை இருக்கிறது. அதன்மேல் அவளுக்கு உயிர். நீ போய் அந்தப் பூனையின் வாலை மிதித்துவிட்டால், மந்திரம் உடைந்து விடும். பிறகு மலர் விழி உன்னை நேசிப்பாள். உன்னைத் திருமணம் செய்து கொள்ளவும் இணங்குவாள்' என்றாள் தேவதை.'ஒரு பூனை வாலை மிதிப்பதற்கு யாராவது பயப்படுவார்களா?' என்று கேட்டுவிட்டு பத்திரகிரி ராஜன் வேகமாக இளவரசியின் அரண்மனைக்குச் சென்றான். அவன் அரண்மனையின் அந்தப்புரக் கூடத்திற்குள் நுழைந்தவுடனே, 'மியாவ் மியாவ்!' என்று கத்திக் கொண்டே அந்தப் பூனை தாவி வந்து அவன் காலில் உரசிக் கொண்டு நின்றது. பத்திரகிரி ராஜன் அதன் வாலில் காலை வைக்க முயன்றான். ஆனால், அவன் வாலை மிதிக்கக் காலைத் துக்கிய போதெல்லாம் அந்தப் பூனை மியாவ் மியாவ் என்று கத்தியவாறு சட்டென்று திரும்பிக் கொண்டது.