Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நக்கீரர் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வந்த பழங் குடியினரான முடியுடைத் தமிழ்வேந்தர் மூவருள்ளே ஈண்டிய சிறப்பிற் பாண்டியரானோர் வழியமர்ந்த பழவிறன் மூதூராகிய பீடுமிக்க மாடமதுரையிற் சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர் குழாத்துட் பல்லிசை நிறுத்த படிமையோராவர்.இவர், குடிப் பிறப்பாகிய உடையுடுத்துக், கல்வியாகிய மலர் சூடி, ஒழுக்கமென்னும் விழுக்கலன் பூண்டு, வாய்மை யென்னு முணவுண்டு, நடுவுநிலையென்னும் நகரின்கண் தூய்மையென்னும் ஆதனத் தமர்ந்து, அழுக்காறின்மை, அவாவின்மை யெனப்படும் இரு பெரு நிதியமும் ஒரு தாமீட்டுத் தோலா நாவின் மேலோராகித், தமக் கொப்பாரும் மிக்காருமில்லையாக விளங்கினரென இவரது வரலாறு கூறாநிற்கும். அக்காலத்துப் புலவரெல்லாரும் பாட்டியற்றிய மட்டிற் பெயர் சிறந்தாராக, இவர், பாட்டுப் பல் புனைந்ததன்றி, ஆலவாய்ப் பெருமா னடிகளருளிய பொருணூலுக்குப் பொருள் காணாது மயங்கிய யாவருந் தெருளுமாறு சிறந்ததோருரை கண்டு புகழ்சிறந்து விளங்கினர். அவ்வுரை பின்னுளோருரை கட்கெல்லாம் உரையாணியாய் நிற்பதொன் றென்னலாம். இன்னணம் பல்லாற்றானும் புகழ்மிகப் படைத்த இவ்வாசிரியர் வரலாற்றினை யாம் அறிந்து கோடற்குக் கருவியாயிருப்பன இவரியற்றிய நூல் உரைகளும், திருவிளையாடல் முதலிய புராணங்களும், பிறவுமாம்.