Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
கரையைக் கடந்து கொண்டிருந்தது அலைகளின் திவலைப் புரட்சி நில்லாத அலைகள் பாறைமேடுகளைச் சாடின நிறை ஆழம் தொட்டன தளும்பித் தளும்பி மையத்தில் நிலைத்தன கண்கள் தொட்ட வெளியெல்லாம் சூரிய ஒளிச்சிதறிய கண்கூச்சம்போல இமைகள் மூடி மூடித் திகைத்தன நிறைமாதக் கையேடு தொலைந்தது சரிந்து விழுந்த கரைமணலில் கைகள் கலந்தன தொலைதூரப் பார்வையில் கடந்ததும் நிகழ்ந்ததும் மோதின கண்கூடாரத்தில் மாயவெளி விரிக்கும் நிலவின் இரசாயன ஒளிநீர்மம் அணைக்கத் திமிறும் அலையும் அதன் பின் அணைக்க ஓடிவரும் அலையும் உன் பாதவிரல்களை ஈரப்படுத்தும் முயற்சியில் மீண்டும் முதல் அலை பாய்ந்தது