Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஒருவன் உலக வாழ்க்கையே வேண்டாம் என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக் கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவ னாவன்?சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கை வாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று, விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது. இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய் நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும்போ தெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய் நிகழ்ந்து வருகிறது.உயிர்களின் நலத்துக்கு உடல் உலகு முதலியன இறைவனால் அருளப்படுகின்றன என்று சைவ சித்தாந்தம் அறிவுறுத்து கிறது. இவ்வறிவுறுத்தல் இக்கால உலகுக்கு இன்றியமையாத தென்பதற்கு ஈண்டு விரிவுரை வேண்டுவதில்லை. உலகமே வேண்டாம்; கடவுளே வேண்டும் என்னும் கொள்கைக்கும், கடவுளே வேண்டாம்; உலகமே வேண்டும் என்னும் கொள்கைக்கும் இடையில் அரிமா நோக்கென மிளிர்வது சைவ சித்தாந்த விளக்கம்.மதுரையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முப்பத் தெட்டாவது ஆண்டு விழாக் கூட்டம்(27,28,29-12-1943)என் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையில் இயற்கை வாழ்க் கையை விடுதலைக்குக் கொழுகொம்பாகக் கொள்ளுதல் வேண்டுமென்று சைவ சித்தாந்தம் சாற்றுவதையும், அத்தகைய வாழ்க்கை யைச் சாம்ராஜ்யங்கள் குலைத்துக் கேடு சூழ்ந்ததை யும், அதனால் பெரும்போர் எழுச்சி ஒருபாலும் புது உலக முழக்கம் இன்னொருபாலும் தோன்றியுள்ளதையும் எடுத்துக் காட்டல் எனது கடனாகியது.