Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாககருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது.தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில்ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும்,மனநிறைவுக்கும் ஈடு இணை கிடையா. ஆனால் இதைப்பற்றிய எந்த விதவெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத பொதுப்புத்தியை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தில்மாற்றுக் கருத்துகளை பேசவும் எழுதவும் துணிச்சல் தேவை. நிறுவப்பட்டுள்ள ஒழுங்குநியதிகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனதுடன் படிக்க வேண்டிய கவிதைகள்இவைகள். கொங்கு மண்ணின் பேச்சு வழக்கிலான கவிதைகள் இத்தொகுதிக்கு கூடுதல்சிறப்பை சேர்க்கின்றன. இந்தத்தொகுதியின் கவிதைகள் 1991-லிருந்து 2024 வரைவா.மு.கோமுவால் எழுதப்பட்ட கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்.