Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதுவே, இந்த முயற்சிக்கான மூலகாரணம். இந்த கட்டுரைகள் அத்தனையையும் ஒருவர் படித்து விட்டாரென்றால், நிச்சயம் உலகத்தை மயில் வாகனம் இல்லாமலேயே சுற்றி வந்து விட்ட உணர்வை ஏய்துவார் என்பது திண்ணம். அத்தனை சுவாரஸ்யங்கள் இதற்குள் பொதிந்து இருக்கின்றன. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கப்பலில், விமானத்தில், உலக நாடுகளுக்கு போய் பணம் ஈட்டுவது மட்டுமல்ல, கப்பலோ, விமானமோ ஏறாமலே, இருந்த இடத்திலிருந்தே, கொஞ்சம் நேசிப்போடு உலக சினிமாவை தேடினால், திரை மகள் நம்மை தேடி வருவாள். புதுச்செல்வம் தருவாள். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. கலைமகள் தருகிற அறிவுச் செல்வமும் செல்வம் தான். அதை திரைகடல் தாண்டி இருக்கிற அத்தனை உலக நாடுகளின் திரைக்காவியங்களை இந்த உலக சினிமா புத்தகங்களின் வாயிலாக தரிசிக்க இருக்கிறீர்கள். அந்த அனுபவம், நம்மை திரும்ப திரும்ப அதை நினைத்து, பரவசிப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது.Recommendation: ''அவரோட மொழி நயம் ரொம்பவே சிறப்பா இருக்கு. எளிமையாவும், ஆழமாவும் இருக்கு. அதேசமயம் மனசை வருடிக் கொடுக்கறாப்ல இதமாவும் இருக்கு. அவர் நிறைய இலக்கியம் படிக்கிறவர். அதேமாதிரி நிறைய உலக சினிமாக்கள் பார்க்கிறவர். அப்படி பாத்து ரசிச்ச உலக சினிமாக்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் பத்தி அவர் அவ்வப்போது எழுதின கட்டுரைகளை இப்போ ஏழு பாகங்களா உலக சினிமா அப்படீன்ற தலைப்புல கொண்டு வந்திருக்காரு. நிச்சயம் அந்த படைப்புகள் எனக்கு பிடிக்கிற மாதிரியே, உங்களுக்கும் பிடிக்கும்.'' - இயக்குநர் வஸந்த் எஸ் சாய்