Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
தமிழில் பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் இரண்டு வகையாகப் பிரித்தார்கள். மற்ற மொழிகளில் எழுத்தையும் சொல்லையும் பற்றி இலக்கண நூல்கள் சொல்கின்றன. தமிழில் பொருளைப் பற்றியும் இலக்கண நூல்கள் வரையறுக்கின்றன, மிகப் பழைய இலக்கண நூல் என்று இப்போது வழங்கும் வரலாறுகளால் தெரிவது அகத்தியம். அதனை இயற்றியவர் அகத்தியர். அவர் தலைச்சங்கத்தில் இருந்தவர். தலைச்சங்கத்தாருக்கு அவருடைய நூலே இலக்கணமாக இருந்தது. அகத்தியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனியே இலக்கணம் இருந்தது.நாளடைவில் இசைக்கும் நாடகத்துக்கும் தனி நூல்களாக இலக்கணம் இயற்றினார்கள் சில புலவர்கள். இடைச்சங்க காலத்தில் தொல்காப்பியர் இயற்றமிழுக்குத் தனியே இலக்கணம் இயற்றினார். அதுதான் தொல்காப்பியம் . இப்போது கிடைக்கும் நூல்களுக்குள் மிகவும் பழையதாக உள்ளது அது.தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுதிகளையும் பற்றிய இலக்கணங்களை விரிவாகப் புலப்படுத்துகிறது; ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அதிகாரமாக வகுத்துச் சொல்கிறது.பொருளதிகாரம் ஒன்பது பிரிவை உடையது, அவற்றில் அகப்பொருள், புறப்பொருள், செய்யுள், அணி, மரபு என்பவற்றைப் பற்றிய இலக்கணங்களைக் காணலாம்.எழுத்து, சொல் என்ற இரண்டையும் பற்றித் தனியே இலக்கண நூல்கள் பிற்காலத்தில் எழுந்தன. பொருள் இலக்கணத்தைச் சார்ந்த பகுதிகளை விரித்துத் தனித்தனி நூல்கள் பலவற்றைப் புலவர்கள் இயற்றனார்கள். அகப்பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம், பிரபந்த இலக்கணம், பொருத்த இலக்கணம் என்று பல பிரிவுகளாகப் பொருளிலக்கணம் பிரிந்து தனி நூல்களில் சொல்லப் பெற்றது.