Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
எனது முதற் புதினமாகிய ’பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு அளிக்கப்பட்ட நல்வரவேற்பே எனது இவ் இரண்டாவது புனிதத்தை எழுதுவதற்கும் என்னை ஊக்குகின்றது. இது முந்திய தவ்வளவு நீண்ட நூலன்றாயினும், இதிலும் மனித வாழ்க்கைப் பண்பின் பல்வேறு கோணங்களும் பல்வகைப்பட்ட நிகழ்ச்சிகளும் சூழல்களும் இடம் பெறுவதுடன், பல்வேறுபட்ட வாழ்க்கைத் தத்துவங்களையும் இது விளக்குவதாயுள்ளது. மேலும் உடல்நல நூலடிப்படையிலேயே குழந்தை மணம் முதலிய சில பல சமூகப் பழக்க வழக்கங்களின் தீமைகளையும் பிறவற்றையும் இதில் நான் விளக்கியுள்ளேன். இந்து இளைஞர்களுக்கு வாழ்க்கை ஒழுங்கு பற்றிய கல்விப் பயிற்சியளிப்பது மிகவும் இன்றியமையாத தென்பதனை எங்கும் யாவரும் வற்புறுத்தி வரும். இந்நாட்களில், இந் நூலும் இதனுடன் இணைக்கப் பட்டிருக்கும் பிற்சேர்க்கையும் மிகவும் பயனுடையதாயிருக்குமென்று நம்புகிறோம்.’மோனமே பொன்னான ஞானம்’ என்ற மேற்கோளுரையை மனத்துட்கொண்டு இம் முன்னுரையில் இதனினும் விளக்கமாக எதனையும் விளக்காது விடுக்கின்றேன். இத் தத்துவத்தை நான் பின்பற்றுகையில் துருக்கிய சமய உரையாளர் காட்டிய முறை எனக்கு ஒரு முன்மாதிரியாய் அமைய வல்லது. திருப்பள்ளியின் மேடையேறி அடியார் குழுவை நோக்கி அவர், 'மெய்ம்மையிலூன்றிய மெய்யன்பர்களே! நான் உங்களிடம் என்ன கூறப்போகிறேன் என்பதனை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டாராம்.