Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஒரு சிறிய கிராமத்தின் எளிய கூரை வீடு. வாசலில் தெளித்த சாணத்தின் நறுமணம், திண்ணையில் சாய்ந்திருக்கும் தந்தையின் நிம்மதியான சிரிப்பு, அடுக்களை வாசம் - இதுதான் அவனது மழலை உலகின் எல்லை. ஆனால், ஆணிவேரை அறுப்பது போலக் காலத்தின் ஒரு கொடூரமான வினாடியில் தந்தை மறைய, அந்தப் குடும்பம் வறுமையின் முரட்டுப் பாதையில் தூக்கி எறியப்படுகிறது. தன் மகனின் எதிர்காலமே தன் வாழ்க்கை எனத் தீர்மானிக்கிறாள் தாய். மென்மையான தன் கைகள் பாறைபோலக் காய்க்கும் வரை சேற்றிலும் உச்சி வெயிலிலும் உழைக்கிறாள். கூலி வேலை செய்து தன் பிள்ளையை உயரத்தில் பறக்க வைக்கத் தன் குருதியையே உழைப்பாக மாற்றுகிறாள்.ஆனால், நகரத்தின் தார் ரோடும், புதிய நாகரிகமும், படித்தவன் என்கிற கர்வமும் அவனை மெல்ல மெல்ல அவளது வேர்வை மணத்திலிருந்தும், சொந்த மண்ணிலிருந்தும் அந்நியமாக்குகிறது. தான் வளர்ந்த கூட்டை மறந்து, பெற்ற தாயின் தியாகத்தை அற்பமாக நினைக்கும் ஒரு மகனுக்கு, ஒரு தாய் தன் இறுதி மூச்சின் வழியே கேட்கும் அந்த நெஞ்சைக் கீறும் கேள்விகள் என்ன?மண்ணின் எதார்த்தமும், தாய்மையின் தியாகமும், வறுமையின் வலியும், நவீன நாகரிகம் மனித உறவுகளில் விதைக்கும் கசப்பும் கலந்த ஒரு நெகிழ்ச்சியான கிராமியக் கவிதை நாவல்.In a quiet village thatched-roof home, a child’s universe is bounded by simple comforts: the smell of fresh earth, the warm morning sun on the porch, and the reassuring shadow of his father. But when tragedy strikes in a single brutal heartbeat, the anchor is severed, throwing the gentle family into the harsh terrain of relentless poverty.Determined to give her son a future, a mother transforms her soft, nurturing hands into rough, calloused tools of field labor. She endures the scorching sun, the judgment of the world, and grueling physical toil to buy him schoolbooks and clean clothes, stitching wings for him to fly.Yet, as the boy journeys into the town, the pristine ironed shirts, the asphalt roads, and the quiet arrogance of education slowly turn him into a complete stranger to his own soil and his mother’s sweat.Written in evocative verse, Sollu Porukama Ponavane captures the poignant arc of a mother’s unyielding love and the tragedy of a son who walked away-culminating in a deeply moving final plea that lingers long after the last page is turned.