Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
அந்தத் தலைமைத் தளபதி களம் புகுந்து, முல்லை சக்தி, கஸ்தூரி ராஜ், குழந்தைவேலு, குமாரவேலு ஆகிய கழகக் காளையருடன் தனது 29 வது வயதில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து ரயிலை நிறுத்தி மாபெரும் அறப் போரை நடத்தினார். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் பெற்றார். அந்தப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் அவர் கொட்டிய முரசே இந்த நூல். பல பதிப்புகள் வெளிவந்துள்ள இந்த வீர உரையை பாரதி பதிப்பகமும் வெளியிடுவதில் வெளியிடுவதில் பெருமை அடைகிறது. நாம் பலப்பல உலக சூழ்நிலைகட்கு மத்தியில் இங்கு கூடி யுள்ளோம். உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவன், இரவையும் பகலாக்கிப் பாட்டாளி மக்களுக்காகப் பாடுபட்ட அகில உலகத் தொழிலாளர் தலைவன் ஸ்டாலின் இறந்தபின், மலங்கோவ் பதவி ஏற்று அமெரிக்காவுக்குச் சமாதான அழைப்பு விடுக்க, அந்த சமாதான அழைப்பு உண்மை தானா அல்லது சமாதானத் திரைக்குப் பின்னால் ஏதாவது சதித் திட்டம் மறைந்து இருக்கிறதா என்று அமெரிக்க ஏடுகள் ஆராய்ந்து கொண்டிருக்கிற நேரத்தில், இதுவரை யுத்தத்தை அரக்கன் என்று கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்த அவ்வேடுகள் இன்று சமர்க்களத்தில் சமாதானம் நிலவுவது கண்டு வெண்புறாவைக் கார்ட்டூன் போட்டுக் காட்டும் வேளையில் நாம் இங்கு கூடியுள்ளோம்.