Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பதில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம்பிக்கையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் இருபது பெரியோர்களின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன்.பெரியோரின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற்றைத் தெரிந்து கொள்வதால், நமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வுமனப்பான்மை நீங்குகிறது; மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழவேண்டும். அவர்களால் நாடும் உலகும் நற்பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை. எல்லாருடைய ஆசையும் இதுவே.கிரேக்க நாட்டிலே ஒரு பகுதியை, பிலிப் என்ற ஓர் அரசர் ஆண்டுவந்தார். ஒருநாள் அவர் முன்னே, ஏவலர் ஒரு குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தினர். அதன் நிறம் நல்ல கறுப்பு. நெற்றியிலே நட்சத்திரம் போல் வெள்ளைப் புள்ளி இருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதனுடைய பார்வை பயங்கரமாக இருந்தது. அந்தக் குதிரை பொல்லாதமுரட்டுக்குதிரை என்பதைப் பார்த்தவுடனேயே அரசர் தெரிந்துகொண்டார்.'அரசே, இதை இங்கே கொண்டுவருவதற்குள் நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமன்று; ஆனாலும், இதை வசப்படுத்திவிட்டால் இது போர்க்களத்திலே அஞ்சாது எதிரிகளை எதிர்த்து விரட்டப்பயன்படும்' என்றான் பிடித்துவந்த ஆட்களிலே ஒருவன்.உடனே அரசர், சில குதிரை வீரர்களை வர வழைத்தார். அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் குதிரையை அடக்கப் பார்த்தார்கள். ஒருவராலும் முடியவில்லை. ஒரு வீரனுக்குத் தலையிலே கடுமையான அடிபட்டது.