Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரின் சிறந்த பத்திரிகையாகத் திகழ்ந்தது பூஞ்சோலை. அதன் கௌரவ ஆசிரியராகப் பணி யாற்றிய வள்ளியப்பா அவர்கள், நம் தாயகத்தின் தனிப்பெரும் பெரியோர்கள் பலரின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்கள். புது முறையிலே கையாளப்பட்ட அந்தக் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும் என்ற எண்ணத்துடன் இப்புத்தகத்தில் ஏழு பெரியார்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைத் தந்துள்ளோம். தொடர்ந்து இதேபோல் மற்றும் பல பெரியார்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் வெளியிடக் கருதியுள்ளோம்.அந்தத் தெருவில் ஒரு நாட்டு வைத்தியரது வீடு இருந்தது. ஒருநாள், அந்த வீட்டின் எதிரிலே பெரிய கூட்டம் ஒன்று கூடி நின்றது.நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அக்கூட்டத்தைப் பார்த்தான். உடனே அவனும் அங்கே ஓடினான்; கூட்டத்திற்குள் நெருக்கிக்கொண்டு நுழைந்தான்; முன்னால் சென்று பார்த்தான்.தரையிலே ஒரு மனிதன் கிடத்தப்பட்டிருந்தான். அவன் உடல் முழுவதும் பலத்த காயங்கள்! அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நாட்டு வைத்தியர் அவனுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.'என்ன விஷயம்? அவர் யார்? ஏன் அவர் உடம்பிலிருந்து இரத்தம் வழிகிறது?' என்று அந்தச் சிறுவன் பக்கத்திலிருந்த ஒருவரைத் திகிலுடன் கேட்டான்.அதற்கு அவர், 'தம்பி, ஊருக்குக் கோடியில் இருக்கிறதே கரும்புத் தோட்டம்,அங்கே இந்த மனிதன் போனானாம்; அப்போது, ஒரு புலி வந்து. இவன் மீது பாய்ந்ததாம்! அதன் பற்களும் நகங்களும் இவனைப் படுகாயப்படுத்தி விட்டனவாம்!' என்றார்.