Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
அழகுக் கனவுகள் ஏந்திய அரும்பை மலரச் செய்கிறது பனித்துளி.வண்ண மலரின் இனிய மணத்தை எங்தம் எடுத்துச் செல்கிறது தென்றல். கலைஞன் உள்ளத்தில் கலைக்கனவுகள் மலர உதவும் பனித்துளி ரசிகனின் பாராட்டுதல்.கலைஞனின் கலைமணம் எங்கும் பரவ உதவுவது ரசிகனின் ரசனை. என்வாழ்வும் பூங்காவில் ஆர்வமளிக்கும் பனியென, உற்சாகம் தரும் இன்பத் தென்றல் போல வந்து சேர்ந்த இனிய நண்பர், திருவனந்தபுரம், திரு எஸ்.சிதம்பரம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். கண்ணாடியில் நம்முடைய முகத்தைப் பார்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதைப் போலவே நமது அகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டா கிறது. அந்த ஆசையைத் தீர்த்துவைப்பதுதான் கலை உலகு என்னும் கண்ணாடி.திரு. வல்லிக்கண்ணன் ஒரு கலைஞன்; உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டும் கண்ணாடியைப்போன்ற தன்மையுடைய கலைஞன். அதன் விளைவாகத்தான் அகத்தின் மூலை முடுக்கும், எல்லைப்புறமும், அடிமட்டமும் அவர் கதைகளுக்கு விஷயமாகின்றன. அதன் விளைவாகத்தான் மனத்தின் அழுக்கும் திருட்டுத்தனமும் அவர் கையில் படாதபாடு படுகின்றன. 'நாட்டியக்காரி'என்ற இத்தொகுதியில் அவர் கருத்தையும்,கலையையும் ஓரளவுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். 'திருஷ்டிக் கோளாறு'என்ற கதையில் ஒரு எழுத்தாளன் வருகிறான். தன் மனைவியைக் கோபித்துக்கொள்ளும் பொழுது ’பின்னால் நிற்காதே இப்படி முன்னால் வந்து தொலை’என்று சீறுகிறான் உண்மையில் சீறுவது ஆசிரியர்தான்.