Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் ஒழுக்கத்தையும் கடமை உணர்ச்சியையும் உயிரென ஒம்புபவர்கள். ஒழுக்கக் குறை கண்டபோது அவர்கள் எவ்வாறு துடிதுடித்து விடுவார்கள் என்பது அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவர்கள் தாம் கண்டவற்றை மக்களுக்கு உணர்த்தி நல்வழிப்படுத்த 'அறிவுக்கு உணவு' போன்ற நூல்களை எழுதி இருப்பதுடன், பண்டைய பெரும் புலவர்களது இலக்கிய நூல்களையும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப உரை நடையில் எழுதி வருகிறார்கள். இந்த வகையைச் சேர்ந்தது முன்னர் வெளிவந்த 'மும்மணிகள்' என்ற நூலும் இந்த 'நான்மணிகள்' என்ற நூலும், இனி இதைத் தொடர்ந்து ஐந்து மணிகள், மூதுரை முத்து, நல்வழிச்சாறு முதலியனவும் வரவிருக்கின்றன.கி. ஆ. பெ அவர்களின் நடை அழகிலும் சொல்லாராய்ச்சியிலும் கருத்துச் செறிவிலும் உள்ளத்தைப் பறி கொடுத்து, அவர்களின் புதிய நூல்களைக் காணத் துடித்து நிற்கும் தமிழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் பொங்கல் பரிசு நான்கு மணிகள். தமது அறிவுப் படையல்களை அள்ளி வழங்க ஏற்ற கலமாக எங்களை ஏற்றுக் கொண்ட முத்தமிழ்க் காவலர் விசுவநாதம் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும்.தமிழ் வளர்ந்து மறைந்த தமிழ்ச் சங்கங்கள் மூன்று. அவை முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் எனப்பெறும். இவற்றுள் முதற்சங்க இடைச்சங்க காலத்தைத் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. கடைச் சங்ககாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனலாம்.கடைச்சங்க காலத்தில் இருந்த தமிழ் நூல்கள் 36. இவை பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்ற முப்பிரிவை உடையன.