Librería Samer Atenea
Librería Aciertas (Toledo)
Kálamo Books
Librería Perelló (Valencia)
Librería Elías (Asturias)
Donde los libros
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
வெகு நாட்களுக்குப் பின்பு சந்திக்கிறோம். இந்த நீண்ட இடைவேளைக்குக் காரணம்?-வேண்டாம், இது முன்னுரை; முறையீடு அல்ல. இந்த சந்தோஷ சமயத்தில் விரலுக்கிடுக்கில் வழிந்து போனதற்கெல்லாம் கணக்கு ஏன்? 1940/41 வாக்கில் மீனோட்டத்திலிருந்து 1978இல் ’ஐயா’ வரை நம்மிடையே நான்கு தலைமுறை காலம்-நினைத்துப்பார்க்கையில் ஏதோ பயம், கூடவே மகிழ்ச்சி உணர்கிறேன். மீன்கள் நதிகளில் ஓடுகின்றன. நதிகள் கடலுக்கு ஓடுகின்றன. கடல்கள்-பூமியில் நிலபாகத்தைச் சூழ்ந்த நீரின் ஒரே மயம்தானே! யுகக்கணக்கில் இதுவரை ஓடிய மீன்கள் எத்தனையோ?