Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும். சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்று எதனை எடுத்துக்கொண்டாலும் ’மநு’ என்ற பெயர் உடனே விவாதத்துக்கு வந்துவிடும். மநு தர்மசாஸ்திரம் என்பது இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த சட்டவிதிகளின் தொகுப்பாகும். இந்தியாவின் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் மநு என்பது இன்றைய அரசியல்வாதிகள் பலரின் கருத்து. இந்தியச்சமூகம், ’மநுவாதி’ சமூகம் என்று ’இகழப்படுகிறது’.