Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ரஷ்ய இலக்கியத்தில் - உலக இலக்கியத்திலும் கூடத் தான் மகத்தானதொரு ஸ்தானம் பெற்றுள்ள மாக்ஸிம் கார்க்கியைப் பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். கார்க்கியின் கதைகள் கட்டுரைகள் பல தனித்தனியாகவும் புத்தக உருவிலும் தமிழில் வந்துள்ளன; வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். கார்க்கியின் மேதையை உணர்த்தும் சிருஷ்டிகள் பலவற்றிலும் சிறந்தவை, தனித்தன்மை வாய்ந்தவை கருத்தும் கலைநயமும் நிறைந்தவை, அவர் எழுதியுள்ள ’டேல்ஸ் ஆவ் இட்டலி’யில் காணக் கிடக் கின்றன. சிருஷ்டியிலே மனிதன் உயர்ந்தவன்; மனித வாழ்விலே உழைப்பு உயர்ந்தது; தாய்மை புனிதமானது; மனித நலன்கள் போற்றுதலுக்குரியவை; வாழப் பிறந்தவர்கள் மனிதர்கள்; மனித குலத்திற்கு நல்லது எண்ணி, சக மனிதர்கள் வாழ ஒத்துழைத்து அன்பு காட்டுவதன் மூலம் எல்லோர் வாழ்விலும் இனிமையும் வெற்றியும் நிலவச் செய்யலாம்; மனிதன் மகிழ்வுடன் வாழ மக்களிடத்திலும் உண்மை உழைப்பிலும் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம் இத்தகைய எண்ணங்களை வலியுறுத்தும் அழகிய சிறு கதைகள் இவை. கார்க்கி ஒரு கதையிலே குறிப்பிட்டிருக்கிறார்; ’மக்களுக்கு நன்மை செய்வதைப் பார்க்கினும் மகத்தான் இன்பம் வேறெதுவுமில்லை. என்னை நம்புங்கள்; அதை விட இனியதும் அழகானதும் வேறு எதுவுமே கிடையாது, செப்புக் காசுகள், வெள்ளிக் காசுகளை விட மிக முக்கியமானது உழைப்பு. அதற்காக நீங்கள் பெறக் கூடிய ஊதியத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது உழைப்பு. பணம் மறையும்; உழைப்பின் பலன் நிலைத்து நிற்கும்.’