Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம். நூற்றாண்டுகளாகத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரலற்ற பெருந்திரளின் நமட்டுச் சிரிப்பு. அயோத்திதாசர் மீது படிந்திருந்த கனமான பண்டிதத் திரையை விலக்கி அவரை ஒரு மானுடராக வெளிப்படுத்தியதில் டி. தருமராஜின் பங்களிப்பு முதன்மையானது. அரசியல் கட்சிகள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் அயோத்திதாசரைத் தங்களுடைய ஆதர்சமாக வரித்துக்கொண்டது அதற்குப் பிறகுதான்.