Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
என் சிறுவயதில், என் தகப்பனார், காஞ்சிபுரத்துக்கருகே ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் எதிர் வீட்டிலேயே இருந்தார். நந்திக்கு எண்ணெய்க் காப்பிட்டாற்போல் பெரிய சரீரம், பளபளக்கும் கறுப்பு. சுபாவமான வழக்கத்துக்கு மாறாக தான் அனுட்டித்த சைவத்தில் செருக்கு. அறப்பளீசுர சதகம், தேவாரம், பட்டினத்தார் பாடல், திருவாசகம், திருவண்ணாமலைப் பதிகம், அருணகிரி அந்தாதி, அருட்பா, குறள், நாலடியார் வாயிலிருந்து அப்படி அப்படியே கொட்டும். எங்கிருந்துதான் அந்த ஞாபக சக்தியோ? பேசாத சமயங்களில் ரேழித் திண்ணையில், சுவரில் சாய்ந்தபடி, சுட்டு விரலால் காற்றில் ஏதோ வரைந்து கொண்டிருப்பார். முதலியார் சுபாவம் நேரிடையாக, வெளிச்சமாகப் பேசமாட்டார். எதையுமே சொல்லில் ஒளித்துப் பேசுவார்.