Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஏற்றப் பாட்டில் இரு நூறு சால்களுக்கு இருநூறு அடிகள் அமைத்திருக்கிறேன். அவற்றில் காலை நூறு சால்களுக்கு நூறு. பிற்பகல் நூறு சால்களுக்கு நூறு.காலையில், கதிர் தோன்றுவது முதல் அது உச்சியை அடையும் வரை நூறு சால்கள் இரைத்தல் போதுமா எனில் போதாதுதான். இத்தனை சால்கள் இரைக்க வேண்டும் என்பது ஆங்காங் குள்ள பெருநில முடையார்க்கும் ஏற்றம் இரைக்கும் தொழிலாளிகட்கும் ஏற்படும் நடு நிலைத் திட்டத்தைப் பொறுத்ததாகும்.நூறு சால்கட்கு மட்டும் நூறடி எழுதினமைக்குக்காரணம் என்ன?அவ்வாறு அடிகளைத் திருப்பிக் கொள்ளலாம். அவ்வாறு திருப்பித் திருப்பிப் பாடும்போது, காலைப் பதினோரு மணிக்குத் திருப்புகையில் கதிர் தோன்றுவதைச் சொல்லுகின்ற விடியற்கால ’அடி’ சரியாய்இராதே எனில் -நேரப் பொருத்தமிராத அடிகளைநீக்கிச் சால்களின் தொகையில் கழித்துக் கொள்ளும்திறமை இரைப்பார்க்கு உண்டு. இதுபோலவே மாலையிலும் என்க.விளக்கு வைக்கும் வரைக்கும் ஏற்றம் இரைப்பதாய் எழுதியிருக்கிறேன். அதுமட்டு மன்று இராக்காலத்திலும் இரைக்க நேரலாம். அப்போதெல்லாம் இரைப்பவர், காலத்தை -நேரத்தைக் குறிக்கும் அடிகளை நீக்கிப் பொதுவான கருத்துளள அடிகளைப் பாடிக் கொள்க.எங்கணும்-துறைதோறும் நம் கலை, நம் ஒழுக்கம் பயிலவேண்டும். நம் நிலை நினைக்கப்படவேண்டும். இலேசில் இல்லை நம் முழு விடுதலை.ஓங்கு கதிர் வா வா -- நீ[ஒன்றுடனே] வாழிமாங் கனியும் நீதான் -- அந்தவானம் என்னும் தோப்பில்!நீங்கும் பனி என்றே -- இங்குநீ சிரித்து வந்தாய்!நாங்கள் மறப் போமோ -- நீ(நாலுடனே) வாழிஐந் துடனே -- வாழி -- நீஅள்ளி வைத்த தங்கம்!