Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
எழுத்துலகில் ’லா. ச. ரா’ என்ற மூன்று எழுத்துக்களுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.உலகில் பிரம்மா படைக்கும் பாத்திரங்கள் வெறும் செய்திகளைத்தான் உண்டாக்குகின்றன. இந்த எழுத்துலக பிரம்மாவின் படைப்புக்களோ அழியாத இலக்கியத்தையல்லவா தோற்றுவிக்கின்றன.சில பாத்திரங்களின் பேச்சில் இந்த உண்மையைப் பார்க்கலாம். நீ கண்டது கனவில்லை; உன் கற்பனையின் சத்தியம்!இதில் பொன்னைத்தானா உரைக்கரோம்? ஆளையே உரைக்கரோம்!யுத்தம் தந்த பரிசா ஒரு வெள்ளைத் தோல் என்னைக் கொடுத்துட்டு கப்பலும் ஏறிப் போச்சு. நான் வெங்காயத் தோலோடு பிறந்துட்டேன்.நாமம் என்ன திவ்யமானாலும் ரூபத்துக்கு இணையாகுமா? ரூபத்தின் நிழல்களைத்தான் நாமம் தரமுடியும்.இப்படி எத்தனையோ முத்துச் சிதறல்கள் இந்தக் கதைத் தொகுப்பில் காணலாம்,அமைதியாகப் படிக்க, சுவைக்க, அசைபோட, மகிழ உங்களுக்கொரு நல்ல விருந்து!அத்தனை பேரிலும் அவள்தான் அதி குதூகலமாயிருந்தாள். வருவோரை வா, போவோரை இரு என்று கைக் குழந்தைக்காரிகளுக்குப் பசும்பால் தேடிக் கொடுத்து ஜுரக்காரக் குழந்தைகளுக்குச் சமையல்கார மாமாவைத் ’தாஜா’ பண்ணி மிளகு ரஸம் பண்ணச் செய்து கொடுத்து ஊட்டும் குழந்தையைத் தாயின் இடுப்பிலிருந்து பிடுங்கித் தன் இடுப்பில் ஏற்றிக் கொண்டு ஊட்டி, நலங்கு பாடி, ஏசல் பாடி, சிரிப்பும் கேளிக்கையும் சளைத்த இடத்தில் தான் புகுந்து முட்டக்கொடுத்து மறுபடி மூட்டி விட்டு, மோதல்கள் பயமுறுத்திய இடத்தில் குறுக்கே விழுந்து அவைகளின் கதியைச் சிரிப்பாய் மாற்றி, அங்கும் இங்கும் எங்குமெனப் பம்பரமாய், சமயத்தின் உயிராய்....