Librería Samer Atenea
Kálamo Books
Librería Elías (Asturias)
Librería Kolima (Madrid)
Librería Proteo (Málaga)
ஒரு நரன் இறைவியைக் காதலிக்கிறான். பராசக்தி மீதான பக்தி பிறழ்ந்து பெரும் பித்து பிறக்கிறது, மோகத்துக்கும் மோட்சத்துக்கும் மத்தியில் தவமனம் தாண்டவமாடுகிறது. அமர காதலின் வழி அம்மன் உளத்துக்கு அணுக்கம் ஆகிறான் மானுடன் - பலனாய் கைலாயம் கலங்குகிறது, சதுர்வர்ணம் பதறுகிறது. சாமிக்குச் சூடித் தந்த சுடர்க்கொடி ஆண்டாள் ஆனாள் - கன்னி தெய்வத்தின் தழல் தீண்டியவன் ஆண்டான் ஆனானா?காவிக்கும் கறுப்புக்கும் இடையேயான சாஸ்வதச் சமரின் காலத்துளி இப்புனைகதை. பாரதியின் மீசையும் பெரியாரின் தாடியும் ஒருமுகமாகும் அற்புதம் இதில் நிகழ்கிறது. நவீன மொழியில், நாவல் வடிவில் அரங்கேற்றப்பட்டுள்ள காவியம் - The Odyssey of CSK!