LIBROS DEL AUTOR: m p sivagnanam

6 resultados para LIBROS DEL AUTOR: m p sivagnanam

  • Thamizhar Kanda Gandhi
    M. P. Sivagnanam
    காந்தியடிகளைப் பற்றிய இச்சிறு நூல் அப்பெரியாரின் மறைவுக்குப் பிறகு யான் 'தமிழ் முரசில்' எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே யாகும். காந்தியடிகளின் வாழ்நாளில் அவரைப் பின்பற்றிய தொண்டர்களில் யானும் ஒருவன் என்பதைத் தமிழகம் நன்கறியும். அடிகளின் அடிச் சுவட்டைத் தொடர்ந்து செல்லத் துவங்கிய பிறகு எனது வாழ்க்கையே முற்றும் மாறிவிட்டது. அறி யாமை என்னும் இருளில் அல்லற்பட்ட என்னை தமது அன்பொளி க...
    Disponible

    8,09 €

  • Silambil Eedupattatheppadi
    M. P. Sivagnanam
    'சிலம்பில் ஈடுபட்ட தெப்படி?' என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம். எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும்.நான் ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டு காலம் அடைபட்டிருந்த போது, என் உடம்பு கரைந்து கரைந்து- எலும்பு இளைத்து இளைத்து மரண அபாயத்துக்குள்ளானேன். அந்த நிலையில் வடநாட்டுப் பருவநிலை என் உடம்புக்குப் ...
    Disponible

    9,31 €

  • Kappalottiya Tamizhan
    M. P. Sivagnanam
    இந்திய சுதந்தரப் போரில் ஈடுபட்டு, இன்னல் பல ஏற்றவர் வ.உ.சிதம்பரனார்.தமிழரின் தன்மானத்தைக் காக்க, வீரர் சிதம்பரனார் கண்ட கனவுகளை இன்று நம்மிடையே இருந்து அதை நனவாக்கிக் கொண்டிருப்பவர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். வீரர் சிதம்பரனாருக்கு ’கப்பலோட்டிய தமிழன்’ என்னும் சிறப்புப் பெயரை வழங்கி அவரது புரட்சிமிக்க செயல்களை எழுத்தினாலும் பேச்சினாலும் தமிகத்திலும் வெளி இடங்களிலும் பரவச்செய்பவ...
    Disponible

    11,24 €

  • Valluvar Vagutha Vazhi
    M. P. Sivagnanam
    திருவள்ளுவரைப் பற்றியும், அவர் இயற்றிய திருக்குறளைப் பற்றியும் ’ஆராய்ச்சி’ என்ற பெயரால் வெளிவந்த கட்டுரைகளும் நூல்களும் கணக்கில் அடங்காதன. முதற் குறளில் வரும் ’ஆதி-பகவன்’ என்ற இரு சொற்களைக் கொண்டு எழுந்த கற்பனைக் கதைகள் அளவில.'வள்ளுவர் நந்தன் குலத்தில் வந்தவர்' என்பர், பிறப்பால் உயர்வு தாழ்வு காணாத பெருந்தகையாளர்கள்.'அது உண்மையன்று; வள்ளுவர் அப்பழுக்கற்ற அந்தணர்' என்பர், அறிவை ...
    Disponible

    8,18 €

  • Kayaththaatril Kattabomman
    M. P. Sivagnanam
    பாஞ்சாலங்குறிச்சியின் வீரப் புரட்சியை விளக்கும் வீரபாண்டியக் கட்டபொம்மன் என்ற எமது வெளியீட்டுக்கு, தமிழகம் எதிர்பாராத அளவுக்கு அதிக ஆதரவு தந்துவருகிறது. எனினும், நூல் பெரிதாயிருக்கிற காரணத்தால் விலை அதிகமாக இருப்பதால், சாதாரண ஏழை மக்கள் வாங்கிப் படிப்பதற்காக பாஞ்சைப் புரட்சியைச் சுருக்கமாகக் கூறும் சிறு நூலொன்றை குறைந்த விலையில் வெளியிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தினர். எமக்கும் அ...
    Disponible

    7,22 €

  • Silapathikaramum Tamizharum
    M. P. Sivagnanam
    தூங்கிக் கிடந்த தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பியவர், தலைவர் ம. பொ. சிவஞானம். ஒவ்வொரு தமிழ் மகனும் என்னுடைய வீட்டிற்கு நான் அதிகாரி என்று எண்ணும்படி செய்தவரும் அவரே. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் பேசும் திறமையுள்ள சிலரில் முதல் வரிசையில் இருப்பவர் திரு. ம.பொ.சி. ஆனால் சிலருக்குப் பேசத் தெரியும், எழுதும் சக்தி இருக்காது. இலக்கியம், அரசியல் இரண்டு துறையிலும் பேசும் வன்மையும் எழுது...
    Disponible

    7,22 €