LIBROS DEL AUTOR: era murugan

14 resultados para LIBROS DEL AUTOR: era murugan

  • YAADHUM OORE
    ERA. MURUGAN
    பர்வீன் பாட வரும்போது ராத்திரி எட்டே கால் மணி. நாரதகான சபாவே அதிர்கிறபடி கரகோஷம். சட்டென்று நம்ம குடும்பத்தில் ஒருத்தர் மேடையில் வந்து உட்கார்ந்த மாதிரி எல்லோரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து ஒரு நிமிஷத்தில் அந்நியோன்னியத்தை ஸ்தாபிக்க அவரால் மட்டும்தான் முடியும். ’நீங்க மெட்ராஸ். நல்ல அருமையான ரசனை. ஆனா, ராத்திரி ஒன்பது மணியானா டவுன் பஸ்ஸை ரயிலைப் பிடிக்கக் கிளம்பிடுவீங்க... அது...
    Disponible

    31,65 €

  • VEMBANAATTU KAAYAL
    ERA. MURUGAN
    மேற்குவாசல் கதவு திறக்கிறது. தோளில் ஒருவசம் மாத்திரம் சட்டை இருக்க, முக்கால் வாசி கழற்றியபடிக்கு ஆண்கள் நுழைகிறார்கள். அம்மே நாராயணா அம்பாடிக் கண்ணா என்று உரக்க நாமம் சொல்லியபடி கூந்தலில் துளசியும் நெற்றியில் சந்தனக் குறியுமாகப் பெண்கள்.பலிக்கல் பக்கம் சிறுபறை கொட்டி ஒருவர் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்கிறார். சந்தன வாடை. மெல்லிய வியர்வை நெடி. பக்கத்தில் நிற்கும் பெண்ணின் தலைமுடி...
    Disponible

    17,61 €

  • IDHUVUM ADHUVUM UDHAVUM
    ERA. MURUGAN
    சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக்கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டுவிடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களா...
    Disponible

    13,33 €

  • EDHO ORU PAKKAM
    ERA. MURUGAN
    கனவையும் கவிதையையும் தனித் தனியாகக் கைவசப்படுத்தவும், கலந்து கட்டியாகக் கொடுத்து வேடிக்கை பார்த்து சிரிக்கவும் இரவுக்குத்தான் முடியும். அது ஒரு முழுப் போக்கிரி. போக்கிரிகள் சுருட்டு குடிப்பார்கள். நல்லவர்கள் அந்த வாடையை அனுபவிப்பார்கள். எனக்கு சுருட்டும் பிடிக்கும். ராத்திரியும் பிடிக்கும். போக்கிரிகளையும். நானே போக்கிரிதான். கவிதை எழுதறேனே.மின்சாரம் போன இன்னொரு ராத்திரி. துருவ...
    Disponible

    14,36 €

  • VAADHAVOORAN PARIGAL
    ERA. MURUGAN
    ஓரான் பாமுக்கின் ’இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.எனக்கு அங்கே கொறிக்க காகித அல்வா கிடைத்தது. காகிதத்தைப் போட்டு அல்வா கிண்டித் தின...
    Disponible

    9,57 €

  • RAMOJIUM
    ERA. MURUGAN
    வாரம் நாலு ராத்திரி, காக்கி நிஜாரும், அரைக்கை காக்கிச் சட்டையும், கையில் மூணு பேட்டரி அடைத்த டார்ச் லைட்டும், வாயில் ஊய்ய்ய்ய் என்று எதிரொலித்து ஒலிக்கும் விசிலும், இன்னும் முடிந்தால் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கி சகிதம் தெருவை, பேட்டையை ரோந்து சுற்றி வர வேண்டும். எதிரி விமானம் வருவதாகத் தெரிந்தால் ஏஆர்பி சைரன் ஒலிக்குமில்லையோ. அப்போது, தெரு முனையில் தோண்டி வைத்த பாதுகாப்பு ஷெல்டர...
    Disponible

    45,50 €

  • NUMBER 40 RETTAI THERU
    Era. Murugan
    கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, ’தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார்.அவ்வப...
    Disponible

    23,12 €

  • 1975
    Era. Murugan
    போன மாதம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி மாணவர்கள் அறுபது பேரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act - MISA) மிசாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டதாக குல்கர்னி சொன்னது நினைவு வந்தது. நேரு பெயரில் பல்கலைக்கழகம் இருந்தாலும் மார்க்சிஸ்டுகளின் கூடாரமாம் அது. அந்த அறுபது மாணவர்களும் எமர்ஜென்சி காலத்தில் தைரியமாக காரல் மார்க்ஸின் கம்யூனிச சித்தா...
    Disponible

    30,43 €

  • VISHWAROOPAM
    Era. Murugan
    நேற்று விடிகாலை காசர்கோட்டில் இருந்து கிளம்பி அங்கங்கே கொஞ்சம் நின்று இந்தக் காளைவண்டி நகர்ந்தபடி இருக்கிறது. பூர்வீகர்கள் எப்போதும் போல் வண்டிக்கு முன்னால் ஆவி ரூபமாக நகர்ந்து வழிநடத்திப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மகாதேவனுடைய அம்மா விசாலாட்சியும் பிரம்புக் கூடையில் இரண்டு எலும்பாக மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். கொல்லூரில் அவளுக்கு ஒரு பிரார்த்தனை பாக்கி இருக்கிறது...
    Disponible

    52,60 €

  • VAAZHNTHU POTHIRE
    Era. Murugan
    இருட்டில் லாந்தரைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு படி இறங்கி வந்த யாரோ சொல்லியபடி காத்திரமான நிழல்களைச் சுவர்களில் பதித்துப் போகிறார்கள். படகு நீள முழக்கி அழைத்தபடி காயலில் மிதந்து வரும் சத்தம் கேட்கிறது. அடர்ந்த திரையாக மழை வழி மறைக்கும் வேம்பநாட்டுக் காயல்.படகுத் துறையில் குடையோடு நிற்கிற சாமு சொல்கிறான் -தம்புராட்டி, வரூ ...
    Disponible

    37,82 €

  • ACHCHUTHAM KESAVAM
    ERA. MURUGAN
    தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள். சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன். அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். இந்த கணத்துக்காக தெய்வங்களுக்கும் அசுரர்களுக்கும் நன்றி. ...
    Disponible

    31,53 €

  • ARASOOR VAMSAM
    Era. Murugan
    அரசூர் பற்றி எழுது.முன்னோர்கள் சொன்னார்கள்.அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை. ...
    Disponible

    32,60 €

  • Project Management
    Era. Murugan / Era.Murugan / EraMurugan
    ...
    Disponible

    12,14 €

  • London Diary
    Era. Murugan / Era.Murugan / EraMurugan
    ...
    Disponible

    16,63 €